பாபு கணேஷ்
பாபு கணேஷ் | |
---|---|
பிறப்பு | இந்திய ஒன்றியம், தமிழ்நாடு |
பணி | திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர், பாடல் எழுத்தாளர், நடன அமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–தற்போது வரை |
பாபு கணேஷ் (Babu Ganesh) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர்-இயக்குனர் ஆவார். இவர் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது படங்களில், திரைப்படத் தயாரிப்பு தொடர்பான கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், இசை, பாடல் வரிகள், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, நடிப்பு, ஸ்பெசல் எபக்ட், இயக்கம், தயாரிப்பு, நடனப் பயிற்சி, சண்டைப் பயிற்சி போன்ற பல அம்சங்களை அடிக்கடி முயன்று பார்த்துள்ளார்.[1][2]
தொழில்
பாபு கணேஷ் முதலில் கடல்புறா (1993) என்ற படத்தில் அறிமுகமாகி நடித்தார். பின்னர் விக்ரமனின் புதிய மன்னர்கள் (1994) படத்தில் துணை வேடத்தில் தோன்றினார். பாபு கணேஷ் பெரும் செலவில் பாரதி என்ற படத்திற்கான ஏற்பாடுகளை 1996இல் துவக்கினார். இப்படத்தில் இவருடன் குஷ்பூ நடிக்க முடிவானது. மேலும் இந்த ஜோடி படப்பணிகளைத் துவக்கும் முன்பு அன்னை தெரேசாவை சந்தித்து ஆசி பெற்றது. ஆனால் படத்தின் பணிகள் விரைவில் நிறுத்தப்பட்டன. படமும் வெளியாகவில்லை. இதேபோல் இவர் குஷ்புவுடன் ஆர். சி. சக்தியின் இத்தனை நாள் எங்கிருந்தாய் என்ற படத்தில் சிலகாலம் பணியாற்றினார். ஆனால் இந்தப்படம் இறுதியில் நிறைவு பெறவில்லை.[3] பின்னர் இவர் 1997 ஆம் ஆண்டில் நான் ஒரு இந்தியன் என்ற படத்தின் பணிகளைத் துவக்கினார். இப்படத்தில் கதாநாயகியாக வினிதா நடிக்க, இளையராஜா இசையமைத்தார். ஆனால் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. பின்னர் இப்படத்தை 2003 இல் தேசிய பார்வை என்ற பெயரில் வெளியிட முயன்றார். ஆனால் இயலவில்லை. ஆனால் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவின் பிரபலத்தைப் பயன்படுத்தி 2006 ஆம் ஆண்டில் படம் வெளியிடப்பட்டது.[4] பாபு கணேஷ் பின்னர் நாகலிங்கம் (2000) ஒரு பக்தித் திரைப்படத்தின் பணியைத் தொடங்கினார். மேலும் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு முன்னர் பத்திரிகைகளுக்கு அளிக்கபட்ட அறிக்கைக்காக புகழ்பெற்றது. திரைப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வாசனை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், இவ்வாறு வெளியிடப்படும் முதல் தமிழ்ப் படம் இது என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த படம் 2000 ஜூனில் மோசமான விமர்சனங்களுடன் வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[5] 2000 களின் முற்பகுதியில், இவர் மெரினா பீச் என்ற பெயரிலான படத்தின் பணிகளைத் துவக்கினார். இப்படத்தில் ரிவா பப்பர் நடிக்க இவர் இயக்குநராகவும், மந்திராவுக்கு ஜோடியாகவும் நடித்தார். இருப்பினும் இந்த படமும் பின்னர் வெளியிடப்படவில்லை.[6][7][8]
2003 ஆம் ஆண்டில் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசையான விண் தொலைக்காட்சியின் படைப்பு இயக்குநராக பாபு கணேஷ் நியமிக்கப்பட்டார்.[9] 2006 வது வருடம் நடிகை என்ற திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கினார் படத்தில் தேஜாஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்தார். இது முந்தைய தசாப்தத்தங்களில் பல தமிழ் நடிகைகள் தற்கொலைக்கு காரணமான பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் எனப்பட்டது. பாபு கணேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் படத்தின் கதை, திரைக்கதை, உரையாடல், இசை, பாடல் வரிகள் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றிருந்தார். இந்த படம் கவனிக்கப்படாமல் போனது.[10][11] பின்னர் பாபு கணேஷ் தனது மகன் ரிஷிகாந்த் நடிக்க 2012 ஆம் ஆண்டில் நானே வருவேன் என்ற படத்தை முடித்து திரையரங்கில் வெளியிட காத்திருந்தார்.[1] இவர் தற்போது தெலுங்கு திகில் படமான நின்னு ஒதலா என்ற படத்தில் சகீலா, தேஜாஸ்ரீ ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு நடத்தி வருகிறார், அதே போல் தனது மகனுடன் கடல் புறா என்ற பெயரிலான ஒரு படத்தின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | இயக்குனர் | நடிகர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1993 | கடல் புறா | ஆம் | ஆம் | ||
1994 | புதிய மன்னர்கள் | பாண்டியன் | இல்லை | ஆம் | |
1994 | தாட் பூட் தஞ்சாவூர் | இல்லை | ஆம் | ||
1995 | மெரினா பீச் | ஆனந்த் | இல்லை | ஆம் | சித்ரங்கினி என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது |
1996 | மாதல் மரியாதை | இல்லை | ஆம் | ||
1999 | கெஸ்ட் அவுஸ் | இல்லை | ஆம் | ||
2000 | நாகலிங்கம் | நாகலிங்கம் | ஆம் | ஆம் | |
2001 | தீர்ப்புகள் மாற்றப்படலாம் | கணேஷ் | இல்லை | ஆம் | |
2002 | இரவு பாடகன் | இல்லை | ஆம் | ||
2002 | போலீஸ் சிஸ்டர்ஸ் | இல்லை | ஆம் | தெலுங்கு படம் | |
2005 | பிளஸ் கூட்டணி | ஆம் | ஆம் | ||
2006 | தேசிய பார்வை | ராஜா | ஆம் | ஆம் | |
2007 | ரசிகர் மன்றம் | சத்யா | இல்லை | ஆம் | |
2008 | நடிகை | ஆல்பர்ட் | ஆம் | ஆம் | |
2012 | நானே வருவேன் | ஆம் | ஆம் | ||
2018 | காட்டுப் புறா | ஆம் | ஆம் |
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 http://www.thehindu.com/features/metroplus/shotcuts-big-stars/article4298418.ece
- ↑ [1]
- ↑ "A-Z (II)" இம் மூலத்தில் இருந்து 28 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150128025921/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-2.htm.
- ↑ sify.com
- ↑ "Press Release on Nagalingam" இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924034542/http://www.indolink.com/tamil/cinema/News/2000/June/pnews_12959.html.
- ↑ https://web.archive.org/web/20041106003408/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2000/19-2.htm
- ↑ https://web.archive.org/web/20041123010153/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2001/may/29-05.htm
- ↑ https://web.archive.org/web/20050306213802/http://www.dinakaran.com/cinema/english/gossip/2002/july/03-07-02.html
- ↑ https://web.archive.org/web/20030811090357/http://www.screenindia.com/fullstory.php?content_id=5096
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news/dec-06-04/28-12-06-vadivelu.html
- ↑ http://www.behindwoods.com/features/Gallery/tamil-movies/movies-5/nadigai/