பாட்டியல் மரபு
Jump to navigation
Jump to search
பாட்டியல் மரபு என்பது பாட்டியல் இலக்கணம் கூறும் முதல் நூல்.
இது எட்டாம் நூற்றாண்டு முத்தொள்ளாயிரம் நூலுக்குப் பிற்பட்டது. [1]
எனவே பாட்டியல் மரபு ஒன்பதாம் நூற்றாண்டு நூல்.
இந்த நூலைப் பற்றி உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- பஞ்சமரபு – இதனை ‘முன்னோர் பொருள் நெறி’ எனப் பன்னிருபாட்டியல் குறிப்பிட்டு விரிவுபடுத்துவதாகக் கூறிக்கொள்கிறது.
- பின்னுள்ளோர் பாட்டியல் மரபில் கூறியது கலம்பகச் செய்யுள் – நச்சினார்கினியார் [2]
- பாட்டியல் மரபுடையார் – யாப்பருங்கல விருத்தி
- பாட்டியல் மரபு ஒரு தனி நூல் – பேராசிரியர் உரை [3]
- பாட்டியல் மரபு, மாபுராணம் ஆகிய நூல்கள் தாண்டகம் என்னும் பா பற்றிக் கூறுகின்றன. [4]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005