பள்ளத்தாக்கு நோக்கு முனை, ஊட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி, தமிழ்நாடு

பள்ளத்தாக்கு நோக்குமுனை (Valley View) என்பது  இந்தியாவில், தமிழ்நாட்டில் உதகமண்டலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும்.  இது உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை 67 இல் (NH 67) உதகை பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் (2.5 மைல்) [1] அமைந்துள்ளது.[2] இந்த இடமானது, நீலகிரி மக்களவைத் தொகுதியின் 5 வது வார்டில் உள்ளது.[3] இந்த இடம் கேத்தி பள்ளத்தாக்கின் கண்ணைக்கவர்ந்திழுக்கும் காட்சியினைப் பார்க்க வசதியான இடமாக உள்ளது.[4][5] மேலும் உதகமண்டலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.[6] பள்ளத்தாக்கின் காட்சியானது தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து எனக் கருதப்படும் அளவுக்குப் புகழ் பெற்று விளங்குகிறது.[7] இந்த பள்ளத்தாக்கானது  மைசூர் தக்காணப் பீடபூமியிலிருந்து  கோயம்புத்துார் சமவெளி வரைக்குமாக நீள்கிறது.[8] இந்தப் பள்ளத்தாக்கானது உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளுள் ஒன்றாகும்.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "TOURIST INFORMATION - OOTY - Distance from Ooty bus stand". nilgiris.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  2. "TOURIST INFORMATION - OOTY - Distance from Ooty bus stand". nilgiris.tn.gov.in. Archived from the original on 2010-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  3. "BLOS LIST - 108, UDHAGAMANDALAM ASSEMBLY CONSTITUENCY" (PDF). nilgiris.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  4. 4.0 4.1 "KETTI VALLEY VIEW". Nilgiris.tn.gov.in. Archived from the original on 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  5. "KETTI VALLEY VIEW". nilgiris.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  6. ". Name of the Important Tourist Centres" (PDF). nilgiris.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Ketti Valley". traveldest.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  8. "Ketti Valley View" (PDF). itgoa.org. Archived from the original (PDF) on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.