பரம ராசிய மாலை
Jump to navigation
Jump to search
பரம ராசிய மாலை [1] என்பது குரு நமசிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று. நூலின் காலம் அதன் ஆசிரியர் வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு. தில்லை நடராசப் பெருமானை இவர் பரமராசியன் என்று குறிப்பிடுகிறார். [2] இந்த நூலில் காப்புப்பாடல் ஒன்று மற்றும் 100 பாடல்கள் உள்ளன.
எடுத்துக்காட்டு [3]
1
- சமயம் மிகு மூ வகையில் சார்ந்தோர்க்கும் சிந்தை
- அமைய நெறியோர் தமக்கும் - உமையவள் தன்
- பூமானைச் சந்ததமும் பொன் அம்பலத்து ஆடும்
- கோமானைக் கொண்டே குலா [4]
2
- குகையினில் சோண கிரியினில் உற்றும் குருபரன் ஆகி வீற்றிருந்து
- வகை பெறக் கருணையால் எனக்கு அளித்த வண்மையை மறப்பனோ அடியேன்
- நகையொடு புரம் மூன்று எரித்த நாயகனே நல்ல சீர் அடியார் தமக்குப்
- பகைவரும் உறவர் ஆக்கிடும் பொன் அம்பலவனே பரம ராசியனே. [5]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 175.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பரமராசயன் என்பது இக்காலத்தில் பரம-ரகசியம் என்று கூறப்பட்டு விளக்கம் சொல்லப்படும் நிலையில் உள்ளது
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ காப்புப்பாடல்
- ↑ 96 ஆம் பாடல்