பஞ்சமலக் கழற்றி
Jump to navigation
Jump to search
பஞ்சமலக் கழற்றி [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் இயற்றிய நூல்களில் ஒன்று. மலத்தைக் கழற்றி எறிவது மலக்கழற்றி. இந்த நூல் ஐந்து வெண்பாக்களைக் கொண்டது. நூற்பெயரில் உள்ள 'பஞ்ச' என்னும் சொல் இந்த ஐந்து வெண்பாக்களைக் குறிக்கும். இவர் எழுதியுள்ள ஒழிவிலொடுக்கம் என்னும் நூலில் 'பஞ்ச மலக் கொத்து அறும்' என இவர் கூறியுள்ளது இங்குக் கருதத் தக்கது.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 167.
{{cite book}}
: Check date values in:|year=
(help)