நேதாஜி (திரைப்படம்)
நேதாஜி | |
---|---|
இயக்கம் | மூர்த்தி கிருஷ்ணா |
தயாரிப்பு | ஜி. ரமேஷ் ஜி. சுரேஷ் |
கதை | மூர்த்தி கிருஷ்ணா |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | சரத்குமார் லிசா ரே |
ஒளிப்பதிவு | எஸ். முத்து கணேஷ் |
படத்தொகுப்பு | வி. உதய சங்கரன் |
கலையகம் | ஜி.கே பிலிம் இன்டர்நேசனல் |
வெளியீடு | நவம்பர் 10, 1996 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நேதாஜி (Nethaji) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். மூர்த்தி கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், லிசா ரே ஆகியோர் முதன்மை பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஜி. இரமேஷ், ஜி. சுரேஷ் ஆகியோர் தயாரித்த இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தீபாவளி வெளியீடுகளில் ஒன்றாக 1996 நவம்பர் 10 அன்று வெளி வந்தது.[1][2]
கதை
நேர்மையான உள்துறை அமைச்சரான கருணாமூர்த்தி ( கிட்டி) தன் மகள் பிரியாவை (லிசா ரே ) காப்பாற்ற ஆளுநரைக் கொல்ல பயங்கரவாதிகளுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நேதாஜி ( சரத்குமார் ), நேர்மையான பத்திரிகையாளர், "இந்தியா" என்ற செய்தித்தாளை நடத்திவருகிறார். மேலும் பிரியாவை காதலிக்கிறார். பாபா ( பாபு ஆண்டனி ) தனது வலது கையான தர்மா (விமல்ராஜ்) மூலம் ஆயுதங்களை கடத்தும் பயங்கரவாதி ஆவார். நேதாஜி அறிவியலாளர் சிவசங்கரியை (மணிமாலா) பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். காவல் துறை அதிகாரியான சரண் ( சரண்ராஜ் ) நேதாஜியை வாழ்த்தி பாபாவை கைது செய்கிறார். தர்மா நேதாஜியின் சகோதரி (சுதா), மருமகள் அம்மு (குழந்தை நிகிதா) ஆகியோரை காயப்படுத்தி, அம்முவை கடத்திச் செல்கிறார். அம்முவைக் கொல்வதாக நேதாஜியை தர்மா மிரட்டுகிறார். இதனால் நேதாஜி சிவசங்கரியை கடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். நேதாஜி சிவசங்கரியை கடத்தி அம்முவை காப்பாற்றுகிறார். பின்னர் சரண் நேதாஜியை கைது செய்கிறார். இதன் பிறகு நேதாஜி தன்னை குற்றமற்றவர் என்று எவ்வாறு நிரூபித்து பயங்கரவாதிகளை தண்டித்தார் எப்பதே கதை.
நடிப்பு
- சரத்குமார் - நேதாஜியாக
- லிசா ரே நேதாஜியின் காதலி பிரியாவாக
- மணிவண்ணன் - மணியாக
- பாபு ஆன்டனி - பாபுவாக
- சரண்ராஜ் - சரணாக
- கிட்டி - கருணா மூர்த்தியாக
- செந்தில்
- ஜோதி மீனா
- விமல்ராஜ் -தர்மாவாக
- மணிமாலா - சிவசங்கரியாக
- சுதா - நேதாஜியின் சகோதரியாக
- பேபி நிக்கிதா - அம்முவாக
- சிஐடி சகுந்தலா
இசை
இப்படத்திற்கான இசையை வித்தியாசாகர் அமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார். இப்படத்தின் பாடல்கள் 1996 இல் வெளியிடப்பட்டது.[3]
பாடல் | பாடகர்கள் | பாடல் | காலம் |
---|---|---|---|
1 | "ஹோலி ஹோலி சிஞ்சிலி" | வித்தியாசாகர், சுவர்ணலதா | 5:14 |
2 | "மச்சமுன்ன மச்சம்தான்" | வித்யாசாகர், கோபால் ராவ், சிந்து | 5:01 |
3 | "மை டியர் மை டியர்" | அனுராதா ஸ்ரீராம், பி. பி மணி, பி. ஜி மணி, பாப் ஷாலினி | 5:07 |
4 | "நெருங்க நெருங்க" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:52 |
5 | "ராப்பொழுது" | அனுராதா ஸ்ரீராம் | 5:06 |
குறிப்புகள்
- ↑ "Filmography of nethaji". cinesouth.com. Archived from the original on 2009-09-01. பார்க்கப்பட்ட நாள் 2012-09-16.
- ↑ "Nethaji". entertainment.oneindia.com. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-09-16.
- ↑ "Nethaji - Vidyasagar". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.