நிராமய அந்தாதி
Jump to navigation
Jump to search
நிராமய அந்தாதி என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 10 வெண்பாக்களைக் கொண்டு அமைந்துள்ள அந்தாதிச் சிறு நூல்.
திருஞான சம்பந்தரைப் போற்றும் நூல் இது. திருஞான சம்பந்தரை இந்நூல் ‘துரை காழிச் சம்பந்தர்’ எனக் குறிப்பிடுகிறது. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையரும், அருணகிரிநாதரும் தோன்றல் அல்லது தலைவனைக் குறிப்பிடும் சொல்லாகத் ‘துரை’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.
- நிர்மலம் என்னும் சொல் அழிவைக் குறிக்கும்.
- நிராமயம் என்னும் சொல் மாற்றத்தைக் குறிக்கும்.
குளவி தன் கூட்டுப்புழுவைக் கொட்டக்கொட்டக் குளவியாக மாறிவிடுவது போலவும், விழல் என்னும் நாணல் ஆறு அமாவாசைகளில் பிடுங்கிப் பிடுங்கி நட்டால் விளாமிச்சையாக மாறிவிடுவது போலவும் குணப்பண்புகள் மாறிவிடும் என இது குறிப்பிடுவது கருதிப் பார்க்கத் தக்கது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005