நிபுணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நிபுணன்
நிபுணன்
இயக்கம்அருண் வைத்தியநாதன்
தயாரிப்புசுதன் சுந்தரம்
உமேஷ்
ஜெயராம்
அருண் வைத்தியநாதன்
கதைபாலாஜி நாக்
(கன்னட வசனங்கள்)
திரைக்கதைஆனந்த் ராக்
அருண் வைத்தியநாதன்
இசைநவீன்
நடிப்புஅர்ஜூன்
பிரசன்னா
வரலட்சுமி சரத்குமார்
சுருதி ஹரிகரன்
வைபவ்
ஒளிப்பதிவுஅரவிந்த கிருஷ்ணா
படத்தொகுப்புசதிஸ் சூர்யா
கலையகம்பேஷன் பிலிம் பேக்டரி
விநியோகம்ஐ ஸ்டூடியோ எண்டர்டைமன்ட்
வெளியீடுசூலை 28, 2017 (2017-07-28)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கன்னடம்

நிபுணன் என்பது 2017 ஆம் ஆண்டு இந்திய தமிழ் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும். அருண் வைத்தியநாதன் எழுதி, இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ருதி ஹரிகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுன் நடிப்பில் வெளியான 150 ஆவது திரைப்படம் ஆகும்.[2] நவீன்  இசையமைப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணி புரிந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியது. தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளிவந்தது. திரைப்படத்தின் இரு பதிப்புக்களும் உலகளவில் 28 ஜூலை 2017 அன்று வெளியிடப்பட்டன. இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3][4] படத்தின் கதை 2008 ஆம் நடந்த நொய்டா இரட்டை கொலை வழக்கை மையமாக கொண்டது.

கதைச்சுருக்கம்

சிஐடியில் வேலை செய்யும் ரஞ்சித் காளிதாஸ் (அர்ஜுன்), மற்றும் அவரது சகாக்களான ஜோசப் (பிரசன்னா), வந்தனா (வரலட்சுமி சரத்குமார்) ஆகியோர் மர்மமான முறையில் நிகழும் தொடர் கொலைகளை செய்யும் நபரை கண்டுபிடிப்பதே படத்தின் கதை ஆகும்.

நடிகர்கள்

  • அர்ஜுன் - ரஞ்சித் காளிதாஸ் சிபி-சிஐடியின் அதிகாரி
  • பிரசன்னா - சிபி-சிஐடி இன்ஸ்பெக்டர் ஜோசப்
  • வரலட்சுமி சரத்குமார் - சிபி-சிஐடி இன்ஸ்பெக்டர் வந்தனா
  • ஸ்ருதி ஹரிகரன் - ரஞ்சித்தின் மனைவி சில்பா
  • வைபவ் - ரஞ்சித்தின் சகோதரர் சந்தீப்
  • சுமன் - இம்மானுவேல்
  • சுஹாசினி - திருமதி இம்மானுவேல்
  • கிருஷ்ணா - கிறிஸ்டோபர்  (தமிழ் பதிப்பு)
  • கார்த்திக் ஜெயராம் - கிறிஸ்டோபர் (கன்னட பதிப்பு)
  • உமா ரியாஸ் கான் - வைத்தியர் ரம்யா
  • சுதா ராணி - வைத்தியர் பிரேமா
  • போஸ்டர் நந்தகுமார் - சிவானந்தன்
  • சேதன் - மரியதாஸ்
  • பேபி ஸ்வக்ஷா - ஓவியா

தயாரிப்பு

2015 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இயக்குனர் அருண் வைத்தியநாதன் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படத்ததை இயக்கவிருப்பதாக அறிவித்தார். மேலும் இது அர்ஜுனின் 150 ஆவது திரைப்படம் என்றும், போலீஸ் அதிகாரியின் சாகசங்களை மையமாக கொண்ட இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் என்றும், படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். படத்தின் கதை பல வருடங்களாக மனதில் இருந்ததாகவும் 2014 ஆம் ஆண்டு திசம்பரில் இருந்து திரைக்கதையை ஆரம்பித்ததாகவும் கூறினார்.[5][6] 2014 ஆம் ஆண்டில் கப்பல் திரைப்படத்தில் பணிபுரிந்த பேஷன் பிலிம் பேக்டரியின் உமேஷ், சுதன் மற்றும் ஜெயராம் ஆகியோர் படத்தை தயாரித்தனர். அரவிந்த் கிருஷ்ணா மற்றும் சதீஷ் சூர்யா ஆகியோர் முறையே ஒளிப்பதிவாளராகவும், தொகுப்பாசிரியராகவும் கையெழுத்திட்டனர்.[7] 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் முன்னணி வேடங்களில் நடிக்க பிரசன்னா, வைபவ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருப்பினும் பின்னர் சிம்ஹா விலகினார்.

போலீஸ் அதிகாரியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரும், அர்ஜுனின் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிக்க ஸ்ருதி ஹரிகரனும் கையெழுத்திட்டனர்.[8][9][10] 2015 ஆம் ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பின் காட்சிகள் பெங்களூரில் நடந்தது.[11]  இந்தியத் திரையுலகில் 150 பிரபலங்கள் டுவிட்டர் பக்கம் வழியாக படத்தின் டீஸரை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதால் படக்குழு டீஸரை 2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.[12]

இசை

இந்த திரைப்படத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். படத்தின் இசைத் தொகுப்பு 30 ஜூன் 2017 அன்று சீ சவுத் மியூசிக்கினால் வெளியிடப்பட்டது. படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வெளியீடு

2017 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் திகதி திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டன. விமர்சகர்களிடமிருந்து ரசிகர்களிடம் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. நிபுணன் திரைப்படத்தின் செயற்கை கோள் உரிமைகள் பாலிமர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது.[13]

குறிப்புகள்

  1. ""Arjun has more to perform than his stunts in Nibunan" – Arun Vaidyanathan". Top 10 Cinema (in English). 2017-05-11. Archived from the original on 2019-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  2. Davis, Maggie (2017-07-28). "Nibunan Movie Review: Arjun Sarja's 150th Film Receives Average Response From Critics". India.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  3. Upadhyaya, Prakash (2017-07-26). "Nibunan critics review: Arjun's multi-starrer garner positive response". International Business Times, India Edition (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  4. ""150 and counting: Tamil 'action King' Arjun"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. ""Arun gets ready with a thriller"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "Arjun will do a thriller with Arun Vaidyanathan - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  7. "Bobby Simha and Vaibhav join Arun Vaidyanathan's new crime thriller with Arjun". Behindwoods. 2015-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  8. "Simhaa, Prasanna, Varalaxmi join Arun Vaidyanathan's next". Sify (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  9. "Varalaxmi Sarathkumar has been roped in to Arjun's film to be directed by Arun Vaidhyanathan". Behindwoods. 2015-08-17. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  10. "Just happy to be part of Arjun Sarja's 150th: Sruthi Hariharan". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  11. "Arjun film to start rolling in Bangalore". Sify (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  12. ""Actor Arjun's 150th movie gets Superstar's viewing"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  13. "Satellite Rights Tamil". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
"https://tamilar.wiki/index.php?title=நிபுணன்&oldid=34799" இருந்து மீள்விக்கப்பட்டது