நளினிகாந்த்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நளினிகாந்த்
பிறப்புசென்னை
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979-தற்போது வரை
தொலைக்காட்சிமர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்)
வாழ்க்கைத்
துணை
சனந்தா
பிள்ளைகள்2

நளினிகாந்த் (Nalinikanth) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தற்காக அறியப்படுகிறார். 1980 ஆம் ஆண்டு காதல் காதல் காதல் திரைப்படத்தில் அறிமுகமான இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நளினிகாந்த் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தார். இவரது தோற்றம் ரஜினிகாந்தை ஒத்திருக்கிறது. இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி, மங்கம்மா சபதம், ருத்ரா, புதுபட்டி பொன்னுதாயி, எங்க முதலாளி, ராஜா எங்க ராஜா, யாமிருக்க பயமே போன்றவை ஆகும்.[1]

திரைப்பட வாழ்க்கை

இயக்குனர் தசரி நாராயண ராவால் தெலுங்கு திரைப்பத்தில் நளினிகாந்தை அறிமுகப்படுத்தினார். இவரது முதல் படம் ரங்கூன் ரவுடி 1979 இல் வெளியிடப்பட்டது. அழைத்தால் வருவான், இதயம் பேசுகிறது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் இவர் 35 படங்கள் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் இவருக்கு சில குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் வழங்கப்பட்டன. சிவாஜியின் சத்யம் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இது 100 நாட்கள் ஓடியது. என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் எதிர்மறை பாத்திரங்களில் நடித்துள்ளார்.[2][3]

தொலைக்காட்சிகளில்

திரைப்படங்களில் நடிப்பது இவரது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உதவாததால், தொலைக் காட்சித் தொடர்களைத் தயாரிப்பதாக தனது பாதையை மாற்றிக்கொண்டார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி, மா தொலைக்காட்சி பல தமிழ் மற்றும் தெலுங்கு தொடர்களைத் தயாரித்தார்.[4]

  • காற்றுக்கென்ன வேலி ( விஜய் தொலைக்காட்சி ), வரதராஜனாக (வெண்ணிலாவின் தந்தை)
  • மர்மதேசம் (ரகசியம்), அண்ணாமலையாக

திரைப்படவியல்

இது ஒரு பகுதி திரைப்படவியலாகும் நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1970 கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
1979 ரங்கூன் ரவுடி தெலுங்கு நளினிகாந்த் தெலுங்கில் அறிமுகம்
1979 சிருங்கரா ராமுடு தெலுங்கு பிரதாப்

1980 கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
1980 காதல் காதல் காதல் தமிழ் தமிழில் அறிமுகம்
1980 அழைத்தால் வருவேன் தமிழ்
1980 தேவி தரிசனம் தமிழ்
1981 சத்ய சுந்தரம் தமிழ்
1981 எங்கம்மா மகாராணி தமிழ்
1982 இதயம் பேசுகிறது தமிழ்
1982 பாலிதானம் தெலுங்கு
1983 முந்தானை முடிச்சு தமிழ்
1984 நிரபராதி தமிழ்
1984 தாண்டவா கிருஷ்ணுடு தெலுங்கு வர்மா
1984 வனிதா போலீஸ் மலையாளம்
1984 தேன் சிட்டுகள் தமிழ்
1985 சிவப்பு நிலா தமிழ்
1985 விஸ்வநாதன் வேலை வேணும் தமிழ்
1985 தாம்பத்யம் தெலுங்கு
1985 மங்கம்மா சபாதம் தமிழ் ஜெய்பால்
1985 மனக்கலே தாத்தா மலையாளம்
1986 அம்மன் கோவில் கிழக்காலே தமிழ்
1989 திராவிடன் தமிழ்

1990 கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
1990 13-ம் நம்பர் வீடு தமிழ்
1990 ராஜா விக்ரமார்க்கா தெலுங்கு
1991 ருத்ரா தமிழ்
1992 ராசுக்குட்டி தமிழ் பெரியபண்ணையின் தம்பி
1992 அபிராமி தமிழ்
1992 நட்சத்திர நாயகன் தமிழ்
1993 வால்டர் வெற்றிவேல் தமிழ்
1993 எங்க முதலாளி ராஜா தமிழ்
1994 புதுப்பட்டி பொன்னுத்தாயி தமிழ்
1994 தாமரை தமிழ்
1994 புதிய மன்னர்கள் தமிழ் சிட்டி பாபு
1995 ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி தமிழ்
1995 தமிச்சி தமிழ்
1995 ராஜா எங்க ராஜா தமிழ்
1997 தம்பிதுரை தமிழ்
1998 தேசிய கீதம் தமிழ்

2000 கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2008 காதலில் விழுந்தேன் தமிழ் டாக்டர்

2010 கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2014 யாமிருக்க பயமே தமிழ் பழைய தமிழ்
2014 கத்தி தமிழ்
2014 நம பூதத்மா கன்னடம்
2017 அண்ணாதுரை தமிழ்
2018 குலேபாகவலி தமிழ் சம்பத்தின் தந்தை

2020 கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2020 சியான்கள் தமிழ்

குறிப்புகள்

  1. "Rajnikanth's doppelganger actor Nalini Kanth film works". nettv4u (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  2. "ரஜினிக்கு என்மீது வருத்தமா?". vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  3. Dinamalar (2014-05-27). "மீண்டும் நளினிகாந்த்...! | Nalinikanth backs to tamil cinema". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  4. "Nalinikanth". Antru Kanda Mugam (in English). 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நளினிகாந்த்&oldid=21897" இருந்து மீள்விக்கப்பட்டது