நந்திதேவர் பூசாவிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நநதிதேவர் பூசாவிதி [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்திதேவர் எனபவரால் இயற்றப்பட்டது. நந்திதேவரை நந்தீஸ்வரர் எனவும் குறிப்பிடுகின்றனர். [2] இவர் இயற்றிய 'பூசாவிதி' என்னும் நூலில் 12 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதிநாக அமைந்துள்ளன. பாடல்களில் 'இரசவாதம்' மிகுதியாகப் பேசப்படுகிறது. வைத்தியமும், பூசாவிதியும் பற்றிய செய்திகள் இவற்றில் குறைவாகவே உள்ளன. பாடல்கள் 'பாரப்பா', 'கேளப்பா' என்னும் சொற்களைக் கொண்டு தொடங்குகின்றன. [3]

விக்கினேசர், சண்முகம், சிவம், தேவி, விஷ்ணு ஆகியோரின் பூசைகளைப் பற்றிச் சொன்ன பின்னர், ரேசகம், கும்பகம், பூரகம் பற்றிய பூசைகளும் சொல்லப்படுகின்றன.

பாடல் - எடுத்துக்காட்டு

தாளான சிவத்தினிட பூசை சொன்னேன்

வன்மை உள சத்தியுட பூசை கேளு

வாளான 'இம்' என்னும் கும்பகத்தில்

வட்ட வனமாக ஒருமனதாய் நின்று

ஆளான கதம்பக்கது ஊரி புஷ்பம் வைத்து

அப்பனே பால் பழங்கள் வஸ்து வைத்து

'மான்' ஆன தேவியைத் தோத்தரித்து

மைந்தனே சாஷ்டாங்கம் சரணம் பண்ணே.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 214. 
  2. அரு. இராமநாதன், பதிப்பாசிரியர் (முதல் பதிப்பு 1957, ஆறாம் பதிப்பு 1957). சித்தர் பாடல்கள் முதல் பாகம், இரண்டாம் பாகம். சேன்னை 14: பிரேமா பிரசுரம்,. பக். 323. 
  3. தேவி பூசை பற்றிச் சொல்லும் பாடல் 4 மட்டும் இந்தத் தொடர்களில் ஒன்றால் தெடங்கவில்லை.
"https://tamilar.wiki/index.php?title=நந்திதேவர்_பூசாவிதி&oldid=17380" இருந்து மீள்விக்கப்பட்டது