தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இயல்கள் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துகின்றன. இறுதி மூன்று இயல்கள் தமிழ்நூல் நெறியை உணர்த்துகின்றன. கருத்துகள் உவமத்தால் கூறப்படும்; செய்யுளில் கூறப்படும்; மரபுநெறியைப் பின்பற்றிக் கூறப்படும் என இம் மூன்றும் கூறுகின்றன. இவற்றுள் தொல்காப்பியம் செய்யுளியல் வாழ்க்கைப் பாங்கை உணர்த்தும் செய்யுளின் இலக்கணத்தை 235 நூற்பாக்களில் விளக்குகிறது. யாப்பியல் வகை என 26 பாங்குகளும், வனப்பு என 8 வகைப் பாங்குகளும் இந்த இயலில் கூறப்படுகின்றன. [1]
செய்யுள் உறுப்பு [2]
- மாத்திரை,
- எழுத்து-இயல்,
- அசைவகை
- யாத்த சீர்,
- அடி,
- யாப்பு
- மரபு,
- தூக்கு,
- தொடை
- நோக்கு,
- பா, அளவு-இயல்
- திணை,
- கைகோள்,
- கூற்று
- கேட்போர்,
- களன்,
- காலவகை
- பயன்,
- மெய்ப்பாடு,
- எச்சம்
- முன்னம்,
- பொருள்,
- துறை
- மாட்டு,
- வண்ணம்,
- வனப்பு
- அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு
குறிப்பு விளக்கம்
யாப்புக் குறியீடு |
குறிப்பு
|
மாத்திரை |
கண்ணின் திரை மா [3] அளவுக் கால-நொடி நொடிக்கும் கால அலகு
|
எழுத்து |
மொழியில் எழும் சிறு ஒலி அலகு
|
அசை |
எழுத்துக்கள் இணைந்து அசையும் செய்யுள் அலகு
|
சீர் |
அசைகள் இணைந்து சீராக (ஒழுங்காக [4] ) நடக்கும் செய்யுள் அலகு.
|
(தளை) |
சீர்கள் தளையப்படுவது. [5] [6]
|
2
அடி |
|
யாப்பு |
|
மரபு |
இவற்றில் முன்னோர் நெறியைப் பின்பற்றுதல்
|
தூக்கு |
|
தொடை |
|
3
நோக்கு |
ஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு (உரையாசிரியர்கள் விளக்கம்)
|
பா |
ஆடை நெய்வோர் நூலைப் பாவாக ஓட்டுவது போல வரிசை வரிசையாகப் பாடலடிகளை இணைத்து ஓட்டிய முறைமை. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா. வஞ்சிப்பா, மருட்பா [7], முதலான யாப்பு நோக்குப் பாகுபாடுகளும், அங்கதம் [8] முதலான பொருள் நோக்குப் பாகுபாடுகளும்
|
அளவு-இயல் |
ஆசிரியப்பா 3-1000 அடி, குறள் வெண்பா 7 சீர், பஃறொடை வெண்பா 5-12 அடி, பரிபாடல் 5-400 அடி, பிறவற்றிற்கு வரையறை இல்லை
|
திணை |
அகத்திணை 7, புறத்திணை 7
|
கைகோள் |
களவு, கற்பு என 2
|
கூற்று, கேட்போர், களம், காலவகை |
அகத்திணை மாந்தர் [9]
|
பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை |
அகப்பொருள் பாடல்களுக்குப் பாட்டால் விளையும் பயன், பாட்டினது பொருளால் தோன்றும் நகை முதலான மெய்ப்பாடு, பாட்டின் பயன், பாட்டில் வரும் இறைச்சி முதலானவை, அகப்பொருளா புறப்பொருளா என அறிதல், அவற்றின் துறைகள் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்த இயல் கூறுகிறது.
|
4
மாட்டு |
"அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முடியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை" (தொல். பொ. 522): வாக்கியத்தை முடிக்கச் சொற்கள் விலகிக் கிடந்தாலும் நெருங்கிக் கிடந்தாலும் பொருள்பொருந்தும்படி ஏற்றுக்கோத்துச் சொல்முடிவுகொள்ளும்முறை"
|
வண்ணம் |
20
|
வனப்பு |
8
|
அடிக்குறிப்பு
- ↑ இங்குத் தரப்பட்டுள்ள எண்கள் இந்த இயலின் நூற்பாக்களுக்குத் தரப்பட்டுள்ள வரிசை எண்களைக் குளிக்கும்.
- ↑ 1
- ↑ 1/20
- ↑
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின். (திருக்குறள் 195)
இதில் சீர்மை என்பது ஒழுக்கம்
- ↑ மேய்ப்பவன் மாட்டைத் தொடுக்கும் கயிறு தளைக்கயிறு.
- ↑ சமய நோக்கில் பதியும், பசுவும் இணையும் பாசக் கயிறு.
- ↑ தொல்காப்பியம் 3-390
- ↑ தொல்காப்பியம் 3-429 முதலை 431
- ↑ புலம்பும்போது ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், புள், நெஞ்சு முதலானவை பெசுவது பாலவும் கேட்பது போலவும் பாடப்படும். (தொல்காப்பியம் 3-192)