தேசிகமாலை
Jump to navigation
Jump to search
தேசிக மாலை என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்று இருந்தது என்பதை உரைநூல்கள் குறிப்பிடுகின்றன. இது 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
இந்த நூலின் பாடல்கள் அந்தாதித் தொடையால் அமைந்திருந்தன. [1]
இந்த நூலின் பாடல்கள் பஃறொடை வெண்பாக்களால் ஆனவை. [2]
கருவிநூல்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ பன்மணி மாலையும் மும்மணிக் கோவையும், உதயணன் கதையும், தேசிக மாலையும் முதலாக உடைய தொடர்நிலைச் செய்யுட்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டுகொள்க. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் குறிப்பு
- ↑ ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பாக்களை யாப்பருங்கல விருத்தியுள்ளும், தேசிக மாலை முதலியவற்றுள்ளும் கண்டுகொள்க. குணசாகரின் யாப்பருங்கலக் காரிகை உரை