யாப்பருங்கல விருத்தி
Jump to navigation
Jump to search
யாப்பருங்கல விருத்தி அல்லது யாப்பருங்கல விருத்தியுரை, அமிர்தசாகரர் எழுதிய யாப்பருங்கலம் நூலுக்கு எழுதப்பட்டுள்ள விரிவுரை. இந்த உரைநூல் எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. பதிப்புநூல் இந்த உரையைப் பழைய உரை எனக் குறிப்பிடுகிறது. இந்த உரைநூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இந்த உரை, யாப்பிலக்கணம் பற்றி ஆசிரியர் கூறும் செய்திகளை மட்டும் கூறாமல் அச்செய்திகளோடு தொடர்புள்ள பிறரது செய்திகளையும் ஒப்பிட்டுக் காட்டிக்கொண்டு செல்கிறது. இதன் பயனாக அக்காலத்தில் பயன்பாட்டிலிருந்த பல நூல்களையும், நூலாசிரியர்களையும் அறியமுடிகிறது.
நூல் தரும் பெயர்கள்
நூலாசிரியர்கள்
- அகத்தியனார்
- அணியியலுடையார்
- அவிநயனார்
- அறிவுடை நம்பியார்
- அனவியனார்
- இடைக்காடர்
- ஔவையார்
- கடிய நன்னியார்
- கபிலர்
- கல்லாடனார்
- காக்கை பாடினியார்
- குடமூக்கிற் பகவர்
- குணகாங்கியார்
- கையனார்
- சங்கயாப்புடையார்
- சிறுகாக்கை பாடினியார்
- செய்யுளியலுடையார்
- தொல்காப்பிய-அகத்தியமுடையார்
- தொல்காப்பியனார்
- நக்கீரர்
- நல்லாறனார்
- நற்றத்தனார்
- பத்தினி
- பரணர்
- பரிமாணனார்
- பலகாயனார்
- பனம்பாரனார்
- பாக்கனார்
- பாட்டியல் மரபுடையார்
- பாடலனார்
- புட்கரனார்
- பெருஞ்சித்திரனார்
- பெருந்தலைச் சாத்தனார்
- பேராசிரியர் (மயேச்சுரர்)
- பொய்கைக் கதயானைச்சூழாசிரியர்
- பொய்கையார்
- மயேச்சுரர் (பேராசிரியர்)
- மாபுராணமுடையார்
- மாமூலர் (மூலர்)
- மார்கண்டேயனார்
- மூலர் (மாமூலர்)
- வள்ளுவர் (திருவள்ளுவர்)
- வாசதேவனார்
- வாஞ்சியார்
- வாய்ப்பியனார் (வாய்ப்பியமுடையார்)
- விளக்கத்தனார்.
அரசர், வள்ளல் முதலானோர்
- அச்சுதக் கோ (அச்சுத நந்தி)
- அஞ்சி (அதியமான் நெடுமானஞ்சி)
- அதியர் தங்கோ (அதியமான்)
- அழிசி
- இராவணன் (இலங்கை அரசன்)
- உளியன்
- எயினர்கோன் கண்டன்
- கண்டா கண்டன்
- கதக்கண்ணன்
- கதிரன்
- கருங்கோன்
- கலிமல்லன்
- கவிகண்ணன்
- கற்சிறை
- காம்போசன்
- காரி
- காளிங்கன்
- கிள்ளி
- குட்டுவன்
- கூத்தப்பெருஞ்சேந்தன்
- சங்கபாலன்
- சயந்தன்
- சுங்கன் (கச்சியர் கோ)
- சுவரன்மாப்பூதன்
- செம்பூட்சேய்
- சேட்சென்னி
- சேந்தன்
- தொண்டைமான் இளந்திரையன்
- தொண்டையர் கோ
- நந்தி (செயநந்திவர்மன்)
- நயதீரன்
- நன்னன்
- பல்லவ மல்லன்
- பாரி
- பாலை இளஞ்சாத்தன் வேட்டன்
- மகனை முறைசெய்தான் (மனுநீதிச் சோழன்)
- மயிந்தன்
- மரசேனன்
- மள்ளன் மதிநிலை
- வண்கோசன்
- வரகுணன்
- விசயன்
- விட்டு (விஷ்ணு வர்மன்)
- விண்ணன் (சோழர்படைத் தலைவன்)
- வையையார் கோ
ஊர்கள்
- அத்தியூர் (சின்ன காஞ்சி)
- ஆமூர்
- ஆறை (ஆறகழூர்)
- இலங்காபுரம்
- உறந்தை (உறையூர்)
- ஏமாங்கதம்
- கச்சி (காஞ்சிபுரம்)
- கழுமலம் (சேரநாட்டில் உள்ளதோர் ஊர்)
- குடந்தை (கும்பகோணம்)
- கூடல் (மதுரை)
- கொல்லி
- கொற்கை
- கோட்டாறு
- கோவை (சேவூர்)
- கோளூர்
- திருநெறிக்காரைக்காடு
- திருநென்மலி (திருநெல்வேலி)
- தென்னிரும்பை (வேப்பத்தூர்)
- தொண்டி
- பம்பை
- பழசை (பழையாறு)
- பழையனூர்
- பழையாறு
- பற நாடு (பறம்பு நாடு)
- புத்தூர்
- பெருவல்லம்
- பொதியில் நாடு
- மரந்தை
- வஞ்சி (கருவூர்)
- வாரணவாசி (காசி)
- வேங்கடம்
கருவிநூல்
- அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்), பதிப்பாசிரியர் வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, Madras Government Oriental Manuscripts Series No. 66, 1960
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005