தெய்வத்தின் தெய்வம்
தெய்வத்தின் தெய்வம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். சபரிநாதன்[1] |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
மூலக்கதை | ஜடம் ஆனந்த விகடனில் பிலஹரி எழுதிய சிறுகதை |
திரைக்கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி குமாரி மணிமாலா எஸ். வி. ரங்கா ராவ் எம். வி. ராஜம்மா |
ஒளிப்பதிவு | எம். கர்ணன் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | பரணி பிக்சர்ஸ் |
விநியோகம் | சித்ரா புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 28 டிசம்பர் 1962[1] |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெய்வத்தின் தெய்வம் 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி, தயாரித்து, இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, குமாரி மணிமாலா, எஸ். வி. ரங்கா ராவ், எம். வி. ராஜம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆனந்த விகடன் இதழில் முன்னர் வெளியான பிலஹரி எழுதிய ஜடம் என்ற சிறுகதையைத் தழுவி இத்திரைப்படக் கதை அமைக்கப்பட்டிருந்தது.[2]
திரைக்கதைச் சுருக்கம்
ஒரு வசதியான மனிதருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் கண்மணி மேற்படிப்புக்காகச் சென்னை செல்கிறாள். அங்கே ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த அன்னம் என்ற பெண்ணைச் சந்தித்து அவளுடன் நட்புக் கொள்கிறாள். விடுமுறையின் போது அன்னத்தைத் தன் வீட்டிற்குக் கண்மணி அழைத்து வருகிறாள். வந்த இடத்தில் அன்னத்தின் மீது கண்மணியின் சகோதரன் காதல் கொள்கிறான். அவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. ஆனால் திருமணத்தின் பின் கண்மணியின் சகோதரன் இறந்து விடுகிறான். அன்னம் விதவையாகிறாள். சிறிது காலத்தில் கண்மணி பாபுவைத் திருமணம் செய்கிறாள். ஆனால் அவர்கள் மணவாழ்வு கசந்து போகிறது. பாபு விவாகரத்துப் பெற முயலுகிறான். ஆனால் கண்மணி அதற்குச் சம்மதிக்கவில்லை. விதவையான அன்னத்தை பாபுவின் தம்பிக்குத் திருமணம் செய்து வைக்க கண்மணி முயற்சி செய்கிறாள். இந்தச் சிக்கல்கள் எப்படித் தீர்வாகின்றன என்பதே மீதிக் கதையாகும்.[2]
நடிகர்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் - பாபு
- விஜயகுமாரி - கண்மணி
- குமாரி மணிமாலா - அன்னம்
- எஸ். வி. ரங்கா ராவ் - தந்தை (வசதியான மனிதர்)
- எம். வி. ராஜம்மா - தாய்
- டி. கே. பாலச்சந்திரன் - கண்மணியின் சகோதரன்
- என். என். கண்ணப்பா
- நாகேஷ்
- மனோரமா
- கே. நடராஜன்
- சந்தியா
- ஆர். எம். சேதுபதி
- ராதா பாய்
- ஏ. எம். மருதப்பா
- உதய சந்திரிகா
- மணிமாலா
- கரிக்கோல் ராஜு[3]
தயாரிப்பு குழு
- கலை= பி. அங்கமுத்து
- ஒளிப்படம் = பி. கே. நடராஜன்
- விளம்பரம் = எலிகண்ட்
- ப்ரோசசிங் = வி. டி. எஸ். சுந்தரம்
- ஆய்வகம்: விஜயா
- ஒலிப்பதிவு (வசனம்) = ஜி. மோகன்
- ஒலிப்பதிவு (பாடல்கள்) = பி. வி. கோடீஸ்வர ராவ்
- நடன ஆசிரியர்கள் = வேம்பட்டி சத்யம், பி. ஜெயராமன் [3]
பாடல்கள்
திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். இதுவே அவர் இசையமைத்த இறுதிப்படமாகும். இதன்பின் அவர் அருணகிரிநாதர் திரைப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாலும் அவர் மாரடைப்பால் இறந்து போக டி. ஆர். பாப்பா அந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்தார்.[4]
பாடல்களை இயற்றியோர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ஏ. மருதகாசி, பஞ்சு அருணாசலம், இரா. பழனிசாமி, கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர்.[3]
வரிசை எண் |
பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு(நி:செ) |
---|---|---|---|---|
1 | கண்ணன் மனநிலையை | எஸ். ஜானகி | சுப்பிரமணிய பாரதியார் | 05:27 |
2 | கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 03:24 |
3 | எங்கிருந்த போதும் உன்னை | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:13 |
4 | என் ஆருயிரே | பி. பி. ஸ்ரீநிவாஸ் எஸ். ஜானகி | கு. மா. பாலசுப்பிரமணியம் | 03:54 |
5 | நீ இல்லாத உலகத்திலே | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:14 |
6 | அன்னமே சொர்ணமே | பி. சுசீலா, எஸ். ஜானகி | ஏ. மருதகாசி | 03:17 |
7 | பாட்டுப் பாட வாயெடுத்தேன் | பி. சுசீலா | கண்ணதாசன் | 04:09 |
சான்றாதாரங்கள்
- ↑ 1.0 1.1 (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-08-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170824063853/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962-cinedetails13.asp. பார்த்த நாள்: 2016-11-14.
- ↑ 2.0 2.1 ராண்டார் கை (4 செப்டம்பர் 2016). "Deivathin Deivam (1962)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161114103300/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/deivathin-deivam-1962-tamil/article9072062.ece. பார்த்த நாள்: 14 நவம்பர் 2016.
- ↑ 3.0 3.1 3.2 தெய்வத்தின் தெய்வம் பாட்டுப் புத்தகம். சென்னை: ரியோ ஆர்ட் அச்சகம், சென்னை-2.
- ↑ "Tamil Music Director G. Ramanathan's Man Friday". vamanan81.wordpress. http://vamanan81.wordpress.com/2010/01/14/tamil-music-director-g-ramanathan%E2%80%99s-man-friday/. பார்த்த நாள்: 2016-11-14.