தமிழ் மகாபாரத நூல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாபாரதம், இந்தியாவின் இரண்டு இதிகாசங்களுள் (பழங்கதைகள்) ஒன்று. மற்றொன்று இராமாயணம். இவை இரண்டும் வடமொழியில் தோன்றியவை. இக் கதைகளின் சிற்சில குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளன. இவற்றில் இராமாயணத்தைக் கம்பரும் ஒட்டக்கூத்தரும் தமிழ்ப்படுத்தினர். மகாபாரதத்தை மூவர் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள்.

5 ஆம் நூற்றாண்டில் முதலாம் நந்திவர்மன் காலத்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் தமிழ்ப்படுத்தினார். இந்த நூலின் பாடல்கள் சில இடையில் உரைநடையோடு கூடிய பாடல்களாகக் கிடைத்துள்ளன. [1]

அடுத்து, 10ஆம் நூற்றாண்டில் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் ‘மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும் விளங்கினான் என்று சின்னமனூர் செப்பேடு குறிப்பிடுகிறது. இந்த நூல் கிடைக்கவில்லை.

பின்னர், 13ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் 32ஆவது ஆட்சி ஆண்டில் (கி. பி. 1210) அருள்நிலை விசாகன் என்பவன் பாரதத்தைத் தமிழ்ப்படுத்தினான் என இந்தச் சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அதன் பின்னர், 15ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் முழுமையான நூலாக உள்ளது.

மேலும் பார்க்க

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. 9 ஆம் நூற்றாண்டு மூன்றாம் நந்திவர்மன் காலம் எனக் கொள்வாரும் உண்டு
"https://tamilar.wiki/index.php?title=தமிழ்_மகாபாரத_நூல்கள்&oldid=18449" இருந்து மீள்விக்கப்பட்டது