தங்கத்தின் தங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தங்கத்தின் தங்கம்
இயக்கம்சிராஜ்
தயாரிப்புகே. பிரபாகரன்
திரைக்கதைசிராஜ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புராமராஜன்
இராகசுதா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்அன்பாலயா பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1990 (1990-04-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

 

தங்கத்தின் தங்கம் (Thangathin Thangam) என்பது 1990 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். சிராஜ் இயக்கிய இப்படத்தில் ராமராஜன் இராகசுதா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். இப்படம் 14 ஏப்ரல் 1990 அன்று வெளியானது.[1]

கதை

ஒரு இளம் கிராமத் தலைவர் ஒரு சாதாரண கிராமத்துப் பெண் என்று கருதி ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் பின்னர் அந்தப் பெண் மிகவும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது எதிரிக்கு மிகவும் வேண்டியவர் என்பதை அறியும்போது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் நேர்கிறது.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார்இசையமைத்தார்.[2][3]

பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
"முத்து முத்து" ஆஷா போஸ்லே எஸ். ஏ. ராஜ்குமார் 4:35
"செவந்திப்பூ மாலைக்கட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:14
"தங்கத்தோட தங்கம்" மனோ வாலி 4:46
"ஓர் கிளையில்" கே. ஜே. யேசுதாஸ் 4:02
"செவந்திப்பூ மாலைக்கட்டு" ஆஷா போஸ்லே எஸ். ஏ. ராஜ்குமார் 4:51
"வீர சிலம்புக்காரன்" மனோ, எஸ். ஏ. ராஜ்குமார் வாலி 4:08

எம். ஜி. ராமச்சந்திரனின் படங்களின் பாணியை உண்மையாக பிரதிபலிக்கும் மற்றொரு திரைப்படம் என்று கல்கியின் சி. ஆர். கே. தன் விமர்சனத்தில் குறிப்பிட்டார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தங்கத்தின்_தங்கம்&oldid=33775" இருந்து மீள்விக்கப்பட்டது