டர்போ சி++

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ரோபோ சி++ அல்லது டர்போ சி++
உருவாக்குனர்போர்லாண்ட்
தொடக்க வெளியீடு28 பெப்ரவரி 1991
அண்மை வெளியீடு2006 / 5 செப்டம்பர், 2006
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைஒருங்கிணைந்த விருத்திச் சூழல்
உரிமம்இலவச மென்பொருள்e (Explorer)
Proprietary (Professional)
இணையத்தளம்டர்போ எக்ஸ்புளோளர்

டர்போ சி++ போர்லாண்ட் சி++ கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இந்தத் தொடர் 1991 இல் இருந்து 1994 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஓர் அடிப்படை விருத்திச் சூழலாக டர்போ சி++ 2006 5 செப்டம்பர் 2006 மீள் அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் எக்ஸ்புளோளர் என்கின்ற இலவமாகப் பதிவிறக்கிப் பாவிக்கக்கூடிய பதிப்பினையின் வணிகரீதியிலான புரொபெஷனல் பதிப்பு என்று இருவேறான பதிப்புக்களாக வெளிவந்தது. புரொபெஷனல் பதிப்பு இப்பொழுது விற்பனையில் இல்லை.

வரலாற்றுப் பதிப்புக்கள்

இதன் முதலாவது மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளம் கணினி உலகை ஆட்டிப் படைத்த காலத்தில் வெளிவந்தது. முதலாவது பதிப்பு ஓஎஸ்/2 இயங்குதளத்திற்காக 1.0 எனவெளிவந்தது. 1.01 பதிப்பானது 28 பெப்ரவரி 1991 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தை ஆதரிக்கும் வகையில் வெளிவந்தது.[1] டாஸ் இயங்குதளத்தில் இயங்கும் டர்போ சி++ மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe மற்றும் *.com கோப்புக்களை உருவாக்கும். இது இண்டெல் x86 புரோசர்களுக்கான டர்போ அசம்பிளருடன் இணைத்து விநியோகிக்கப்பட்டது. இந்தக் கம்பைலர் அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் C++ இல் இரண்டாவது பதிப்பினை ஆதரிக்கின்றது.

டர்போ சி++ 3.0 20 நவம்பர் 1991 இல் விண்டோஸ் பணிச்சூழலுக்கான வெளிவந்தது. இதில் டெம்லேட்டுக்களை ஆதரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் 8086 286 செயலிகளுக்கான ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

டர்போ சி++ 3.0 வெளிவந்ததும் மைக்ரோசாப்ட் பணிச்சூழலுக்கான சி++ உருவாக்குவதில் போர்லாண்ட் முயன்றது. விண்டோஸ் பணிச்சூழலுக்கான டர்போ சி++ 3.0 ஐத் தொடர்ந்து டர்போ சி++ 3.1 அதைத் தொடர்ந்து டர்போ சி++ 4.5 உம் வெளிவந்தது. இந்தப் பதிப்பின் 1 இல் இருந்து 3 இற்குப் பாய்ந்ததானது விண்டோஸ் பதிப்புக்களுடன் ஒப்பிடுவதாக அமைந்தாலும் 1989 இல் வெளிவந்த டர்போ சி 1990 இல் வெளிவந்த டர்போ சி++ இவை இரண்டும் ஒருங்கிணைந்த டர்போ சி++ 3 என்றவாறும் கருதலாம்.

3 ஆம் பதிப்பில் இருந்து போர்லாண்ட் இரண்டு பதிப்புக்களாக சி++ ஐ வெளிவிட்டது ஒன்று டர்போ சி++ மற்றையது போர்லாண்ட் சி++. டர்போ சி++ ஆரம்ப நிலை நிரலாக்கருக்கும் பொழுதுபோக்காக நிரலாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் என உருவாக்கப்பட்டது. போர்லாண்ட் சி++ நிரலாகத்தைத் தொழிலாகக் கொண்டு மென்பொருட்களை விருத்தி செய்பவர்களை இலக்கு வைத்து வெளிவந்தது. போர்லாண்ட் சி++ டர்போ சி++ இற்கு மேலதிகாமாக கம்பைலர் ஊடாக நிரலாக்கம் வினைத்திறனாகியது மற்றும் வர்தகரீதியான விருத்தியாளர்களை இலக்கு வைத்து ஆவணப்படுத்தும் வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது. டர்போ சி++ பதிப்பை டர்போ அசம்பிளர், டர்போ விஷன் 1.0 போன்ற் பொருத்துக்கள் மூலம் மேம்படுத்த இயலும்

இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் டர்போ பாஸ்கல், டர்போ பேசிக், ரேபோ சி பணிச்சூழலுடன் ஒத்ததாகும். டர்போ சி++ டர்போ சியின் வழிவந்ததாகும். டர்போ பாஸ்கலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=டர்போ_சி%2B%2B&oldid=382678" இலிருந்து மீள்விக்கப்பட்டது