ஜோதா அக்பர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இக்கட்டுரை, Jodhaa Akbar எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.


Jodhaa Akbar
இயக்கம்அஷுதோஷ் கோவரீகர்
தயாரிப்புரோனி ஸ்க்ருவால
அஷுதோஷ் கோவரீகர்
கதைஹைதர் அலி
[[ அஷுதோஷ் கோவரீகர்]]
இசைஏ.ஆர். ரஹ்மான்
நடிப்புஹ்ரிதிக் ரோஷன்
ஐஸ்வர்யா ராய்-பச்சன்
குல்புஷன் கர்பண்டா
சோனு சூட்
இல அருண்
ஒளிப்பதிவுகிரண் தியோஹன்ஸ்
படத்தொகுப்புபல்லு சலுஜா
விநியோகம்யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ்
வெளியீடுபிப்ரவரி 15, 2008
ஓட்டம்213 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஹிந்தி / உருது
ஆக்கச்செலவுரூ 400,000,000 (தோராயமாக)[1]
மொத்த வருவாய்ரூ 590,300,000 (தோராயமாக)[2]

ஜோதா-அக்பர் (ஹிந்தி जोधा-अकबर, உருது) பிப்ரவரி 15, 2008 அன்று வெளிவந்த ஒரு இந்திய வரலாற்றுத் திரைக்காவியம். இதனை இயக்கி, தயாரித்தவர் 2001 ஆம் ஆண்டின் அகாடமி விருதிற்கு தேர்வுசெய்யப்பட்ட படமான லகானை' இயக்கிய அஷுதோஷ் கோவரீகர். ரித்திக் ரோஷனும், ஐஷ்வர்யா ராய் பச்சனும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபீர் அப்ரார் இப்படத்தில் புதுமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட ஆய்விற்குப்பின் துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கர்ஜத்தில் ஆரம்பமானது.[3]

முகலாய மன்னரான பேரரசர் அக்பராக வலம் வரும் ரித்திக் ரோஷனுக்கும் அவரது இந்து சமய மனைவியான ஜோதாபாயாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் இடையே நிகழும் காதலைப் பற்றிய கதை இது. இப்படத்திற்கு இசை அமைத்தவர் பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஜனவரி 19, 2008 [4] இல் இப்படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. சா பாலோ சர்வதேச திரைப்பட விழாவில் [5] சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பார்வையாளருக்கான விருதையும் கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் [6] இரண்டு விருதுகளையும், ஏழு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும் ஐந்து பிலிம்பேர் விருதுகளையும் பெற்றதோடல்லாமல் மூன்றாவது ஆசிய திரைப்பட விருதுக்கு[7] இருமுறை பரிந்துரைக்கப்பட்டது. தி சார்லட் அப்செர்வர் 2008 ஆம் ஆண்டு உலகம் [8] முழுவதும் வெளியிடப்பட்டுள்ள சிறந்த பத்து படங்களில், இரண்டாவது இடத்தை ஜோதா அக்பருக்கு அளித்துள்ளது.

சுருக்கம்

ஜோதா-அக்பர் 16 ஆம் நூற்றாண்டு காதல் கதை, இது முகலாய பேரரசர் மாமன்னர் அக்பருக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவிற்கும் அரசியல் வசதிக்கான திருமணம் தோற்றுவித்த மெயக்காதலைப் பற்றிக் கூறும் காதல் கதை.

பேரரசர் அக்பருக்கு (ரித்திக் ரோஷன்) கிடைத்த அரசியல் வெற்றிகளுக்கு எல்லையே இல்லை. இந்து குஷ்ஷைக் கைப்பற்றிய ஆப்காநிஸ்தானிலிருந்து வங்காள விரிகுடாவரையும் இமய மலையிலிருந்து நர்மதையாற்றின் வரையிலும் வீழ்த்தி தனது ராஜ்யத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். ராஜதந்திரம், அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பலாத்காரம் ஆகியவைகளின் புத்திசாலித்தனமான பிரயோகம் ராஜபுத்திரர்களின் விசுவாசத்தைப் பெற்றுத்தந்தது. இத்தகைய ராஜபக்தியை அனைவரும் பெற்றிருக்கவில்லை. மகாராணா பிரதாப்பும் வேறு பல ராஜபுத்திரர்களும் அக்பரை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளராகவே கருதி வந்தனர். முகலாயர்களுக்குத் தங்கள் புதல்வியரைத் திருமணம் செய்து கொடுத்த ராஜபுத்திரர்களுக்கும் அங்ஙனம் செய்யாதவர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்களை மகாராணா பிரதாப் தடை செய்திருந்தார். ராஜபுத்திரர்களுடனான உறவை மேலும் பலப்படுத்த ஜொலிக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவை (ஐஸ்வர்யா ராய் பச்சன்) மணந்த பொழுது உத்தம காதல் எனும் புதிய பாதையில் தான் அடியெடுத்து வைக்கப்போவதை அக்பர் அறிந்திருக்கவில்லை.

ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா இத்திருமணத்தின் மூலம் தான் வெறும் அரசியல் கைப்பாவையாகக் கருதப்படுவதை வெறுத்த காரணத்தால் அக்பரின் தற்போதைய தலையாய சவால் யுத்தங்களை வெல்வதோடு அல்லாமல் கோபத்தையும் தீராத காற்புணர்ச்சியையும் கொண்ட ஜோதாவின் ஆழ்மன அன்பைக் கொள்ளை கொள்வதிலும் இருந்தது. இது ஜோதா அக்பர் அவர்களது சொல்லப்படாத காதல் கதை ஆகும்.[9]

வரலாற்று நுட்பம்

படத்தின் பல காட்சிகள் நிஜ சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவை. சில ராஜபுதீய சங்கங்கள் ஜோதாவை மணந்தது அக்பரின் புதல்வன் ஜகாங்கீரே அன்றி அக்பர் அல்ல என்று கோருகின்றனர். இவர்கள் அஷுதோஷ் கோவரீகரிடமிருந்து பொதுமன்னிப்பும் கோருகின்றனர். ராஜஸ்தானின் 30 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை.[10]

பல வரலாற்றாளர்கள் முகலாய ஆட்சிக் காலத்தில் அக்பரின் ராஜபுத்திரமனைவி "ஜோதா பாய்" எனக் குறிப்பிடப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர். அலிகார் இஸ்லாமிய பல்கலைகழக பேராசிரியர் ஷிரீன் மூஸ்வியின் கூற்று படி அக்பர்நாமாவோ(அக்பர் தாமே எழுதிய சுயசரிதை) முகலாய ஆட்சியின் வேறு எந்த வரலாற்று நூலுமோ, அவளை ஜோதா பாய் என குறிப்பிடவில்லை.[11] 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு வரலாற்று நூல்களிலேயே அக்பரின் மனைவி முதன் முதலில் "ஜோதா பாய்" என்று அழைக்கப்படுகிறாள்.[11] தசக்-ஈ-ஜகாங்கிரி என்ற நூலில் அவள் மரியம் சமானி என்று அழைக்கப்படுகிறாள்.[11]

பாட்னா வின் கூடா பக்ஷ் ஓரியன்டல் பொது நூலக இயக்குநர் மற்றும் வரலாற்றாசிரியர் இம்தியாஸ் அகமதுவின் கூற்று படி லெப்டினன்ட் கர்னல் ஜேம்ஸ் டோட்என்பவர் தான் "அன்னல்ஸ் அண்டு அன்டிக்விடீஸ் ஆப் ராஜஸ்தான்" என்ற தனது நூலில் அக்பரின் மனைவிக்கு முதன் முதலில் ஜோதா என்ற பெயரை பிரயோகித்தார். இருப்பினும் அகமதுவின் கூற்றுப்படி ஜேம்ஸ் ட்டோட் ஒரு அனுபவம்வாய்ந்த வரலாற்றாளர் [12] அல்ல. என்.ஆர்.பரூக்கி இன் கூற்றுப்படி ஜோதா பாய் அக்பரின் ராஜபுத்திர மனைவியே அல்ல. மாறாக ஜகாங்கீரின் ராஜபுத்திர மனைவி ஆவாள்.[13]

அஷூதோஷ் கோவரீகரின் கருத்து என்னவென்றால் ,

[27]

எதிர்ப்புகளும் சட்ட பிரச்சனைகளும்

திரைப்படத்தில் பண்டைய ராஜபுத்திர இனத்தின் சித்தரிப்பு, அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட வரலாற்றுத் திருத்தம் என்றும் ராஜபுத்திர வரலாற்றிற்கு பங்கம் விளைவித்து விரும்பத்தகாத பலிகடாவாக்கிய தவறான வழிகாட்டுதலால் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைகூறியுள்ளனர். இச்சமுதாயத்தின் எதிர்ப்பு காரணமாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்டது. எனினும் இதன் தயாரிப்பாளர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்ததால் [14][15] பின்னர் உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் இத்தடை ரத்துசெய்யப்பட்டது. உத்தரபிரதேச அரசின் தடையையும், உத்தரகண்ட்டின் டேராடூன் மற்றும் ஹரியானாவின் அம்பாலா, சோனேபட், ரிவாரி போன்ற நகரங்களில் அதிகாரிகள் விதித்திருந்த தடையையும் நீதிமன்றம் ரத்துசெய்தது.[16]

நடிகர்கள்

குழு

  • கதை :ஹைதர் அலி
  • திரைக்கதை :ஹைதர் அலி மற்றும் அஷுதோஷ் கோவரீகர்
  • வசனம்: கே.பி.சக்சேனா
  • அலங்கார நிபுணர் :ஜேமீ வில்சன்
  • தயாரிப்பு உத்தி  :நிதின் சந்திரகாந்த் தேசாய்
  • வரைகலை  : பங்கஜ் கான்பூர்(டாடா எல்க்ஸ்சி விஷுவல் கம்ப்யுடிங் லேப்ஸ்)
  • முதன்மை உதவி இயக்குனர் :கரன் மல்ஹோத்ரா
  • ஒளிப்பதிவு :கிரண் தியோஹன்ஸ்

தயாரிப்பு

வரலாற்று நுண்மையைக் கடைப்பிடிக்க அஷூதோஷ் கோவரிகர் புதுதில்லி, அலிகார், லக்னோ, ஆக்ரா, ஜெய்பூர் போன்ற நகரங்களில் இருந்து வரலாற்று நிபுணர்களையும் அறிஞர்களையும் வரவழைத்திருந்தார். ஊடகங்களின் ஒரு சாரார் கூறிக்கொண்டிருந்ததைப் போல் இத்திரைப்படத்தின் பெயர் அக்பர்-ஜோதா என்பதை மறுத்து ஜோதா-அக்பர் என்பதில் உறுதியாயிருந்தார். 80 க்கும் அதிகமான யானைகளும் 100 குதிரைகளும் 55 ஒட்டகங்களும் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. "அசீம் ஓ ஷான், ஷாகின்ஷா" என்ற பிரதான தலைப்புடைய பாடல் சிறப்பு வாய்ந்த இடமான கர்ஜத்தில் ஏறத்தாழ ஆயிரம் வாள்-கேடயமேந்திய நடனக்கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதன் நிதி ஒதுக்கீடு 37 கோடி ருபாய்(ஏறத்தாழ 7.42 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)

இதன் முதல் தொலைக்காட்சி விளம்பரம் டிசம்பர் 9,2007 இல் வெளியிடப்பட்டது.

தனிஷ்க் ஜூவல்லரியால் தயாரிக்கப்பட்ட 400 கிலோ தங்க ஆபரணங்கள் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.[17]

வரவேற்பு

பாக்ஸ் ஆபிஸ்

அமெரிக்க மற்றும் லண்டன் மக்களிடையே இத்திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. [1] வடஅமெரிக்க திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே இதன் வருமானம் 1.3 மில்லியன் டாலர்களை மிஞ்சியது, மொத்தமாக 3,440,718 டாலர்களை அள்ளியது. இந்திய திரையரங்குகளில் வருமானம் சற்றே குறைவாக இருந்தாலும், திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே ரூ.24.75 கோடியை தாண்டியது. திரை அபிமானிகளின் விளம்பரம் காரணமாக நான்காம் வாரத்தில் ரூ.50 கோடியை தாண்டி , மொத்தம் ரூ.62 கோடியை எட்டியது.[18][19]

விமர்சனங்கள்

தி சார்லட் அப்சேர்வரின் திரை விமர்சகரான லாரன்ஸ் டாப்மேன் 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவந்தத் திரைப்படங்களில் ஜோதா அக்பருக்கு இரண்டாம் இடத்தைக் கொடுத்துள்ளார்.[8] "ராட்டன் டோமேட்டோஸ்" என்கிற திரைப்பட விமர்சன சேவைதளமோ சாதகமான 8 ப்ரெஷ் மதிப்புரைகளையும் பாதகமான 2 ராட்டன் மதிப்புரைகளையும் அளித்து 75% தரநிர்ணயம் அளித்துள்ளது.[20]

"தி டைம்ஸ் " பத்திரிகையின் அனில் சீனானன் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமான லகானின் இயக்குனர் அஷுதோஷ் கோவரிகரின் பிரம்மாண்டமான இக்காவியவரலாற்றுத் திரைப்படத்திற்கு சிசில் பி .டிமில்லியின் பொழுதுபோக்கு படங்களுக்குரிய அத்தனை அம்சங்களும் இருப்பதாகக் கூறி, ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை அளித்துள்ளார். தற்போதைய இந்தியாவிற்கு இன்றியமையாததென எதிரொலித்துக் கொண்டிருக்கிற செய்தியான "எம்மதமும் சம்மதம்" என்கிற நிலைக்கான உருக்கமான வேண்டுகோளோடு இப்படம் நிறைவடைகிறது.[21] சிஎன்என்-ஐபிஎன் இன் ராஜிவ் மசந்த் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை அளித்து இவ்வாறு கூறுகிறார், "நான் பார்த்த வேறு எந்த திரைப்படமும் இந்த அளவிற்கு ரசிக்கும்படி இல்லை. ஆனால் எனது இருக்கையில் அமர்ந்து ஜோதா-அக்பரை பார்த்த பொழுது நான் அதிர்ஷ்டக்கார திரைப்பட ரசிகனாக உணர்ந்தேன். இது போன்றதொரு திரைப்படம் உருவாக்கப்பட்டது அதிர்ஷ்டம் என்றால் இப்படம் நமது காலங்களில் உருவாக்கப்பட்டிருப்பது அதை விட அதிர்ஷ்டம். எனவே நாம் பிரசித்தி பெற்ற பழைய திரைப்படங்களின் விமர்சனங்களை அறிய முந்தைய தலைமுறைகளைச் சார்ந்திருப்பது போலல்லாமல் இப்படத்திற்கான விமர்சனத்தை நாமே வழங்கலாம் ." [22] பிபிசியின் தாஜ்பால் ரத்தோர் இவ்வாறு கூறுகிறார். "இப்படம் நினைவிற்கு கொண்டுவரமுடியாத 16 ஆம் நூற்றாண்டின் காதல் கதையை அடிப்படையாகப் பெற்றிருந்தாலும் இது அளிக்கும் அழகிய விருந்து அதன் பிரம்மாண்டத்திலும் உயரத்திலுமே நினைவாற்றலைக் கிழித்துச் செல்ல வல்லது.{...] இக்காவிய கதையினைப் பார்க்கும்பொழுது நேரம் ஆகிறதே என்ற கவலை இல்லை." [23]

"தி டைம்ஸ் ஆப் இந்தியா "வின் நிகாத் கஸ்மி இப்படத்திற்கு மூன்று நட்சத்திரங்களை அளித்து இவ்வாறு கூறுகிறார். "இதயம் சரியான இடத்தில் வீற்றிருப்பதே ஜோதா அக்பரின் வெற்றிக்குக் காரணம். இத்திரைப்படம் இனம், மதம், கலாச்சாரம் அனைத்தையும் தாண்டிய காதல் கதையைச் சொல்லி அசைக்க முடியாத இரு அரண்களான மத ஒருங்கிணைப்பையும், சகிப்புத்தன்மையையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியாவைக் கனவு காண்கிறது. அக்பரும் ஜோதாவும் இக்கனவின் வசீகரமான விரிவுரையாளர்கள். கஸ்மி மேலும் கூறுகிறார், "வரலாற்றின் சிக்கலிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளும் மனமிருந்தால் தான் ஜோதா அக்பரை அனுபவிக்க முடியும்." [24] திரைப்படம் வரலாற்று பாடம் போல் நீளமாக இருப்பதாகக் கருதும் "தி நியூயார்க் டைம்ஸ் "ன் ரேச்சல் சால்ட்ஸ், "பிற மதங்களுக்குரிய மரியாதையை அளிப்பதன் மூலமே ஹிந்துஸ்தான் வளம் பெற முடியும்." என்று கூறுகிறார். மேலும் அக்பரின் கதையையும் இஸ்லாமிய இந்து காதல் கதையையும் சொல்லத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் திரு. கோவரிகர் தனது கருத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்." என்று கூறியிருக்கிறார்.[25] "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் " இன் "காலீத் முகமது இப்படத்திற்கு இரு நட்சத்திரங்களை அளித்து கீழ்கண்டவாறு கூறியுள்ளார். நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, சிறந்த கண்ணியமான இயக்குனரான அஷுதோஷ் கோவரிகர் ஒரு வரலாற்றுப் பிரதியின் தொழில்நுட்பக் கணிப்பையும் உணர்ச்சிகளின் பரிமாணத்தையும் தவறாகக் கணித்திருக்கிறார் என்றே கூற வேண்டும். முக்கிய விவரிப்புகள் இதன் குணாதிசயமாக இல்லை." [26]

விருதுகள் [7]

பிலிம்பேர் விருதுகள்

திரை நட்சத்திர விருதுகள்

ஸ்டார் டஸ்ட் விருதுகள்

ஐஐஎப்எ விருதுகள்

வீ.ஷாந்தாராம் விருதுகள்

[28]

சர்வதேச விருதுகள்

இஸ்லாமிய சினிமாவின் கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழா (கசான், ரஷியா)[6]
32 ஆவது சா பாலோ சர்வதேச திரைப்பட விழா (பிரேசில், தென் அமெரிக்கா)[5]
ஆசிய பசிபிக் ஸ்க்ரீன் அவார்டுகள்
  • சிறந்த சினிமா ஒளிப்பதிவு விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டது - கிரண் தியோஹான்ஸ்
3 ஆவது ஆசிய பிலிம் அவார்டுகள்
  • சிறந்த தயாரிப்பு நிபுணருக்கான விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டவர்-நிதின் சந்திர தேசாய்
  • சிறந்த இசைஅமைப்பாளர் விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டவர்-ஏ.ஆர்.ரஹ்மான்

இசை

Jodhaa Akbar
soundtrack
வெளியீடு
January 9, 2008 (music launch)
January 18, 2008 (CD release)
ஒலிப்பதிவுPanchathan Record Inn
A.M. Studios
Nirvana Studio
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்39:43
இசைத்தட்டு நிறுவனம்
UTV Music
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'அழகிய தமிழ்மகன்
(2007)
Jodhaa Akbar 'Jaane Tu Ya Jaane Na
(2008)

அதிகாரப்பூர்வ இசைத்தட்டு ஐந்து பாடல்களையும் இரண்டு வாத்ய இசைகளையும் கொண்டுள்ளது. இசைத்தட்டு ஜனவரி 18 ,2008 இல் வெளியிடப்பட்டது

பாடல் பாடியவர்(கள்) நிமிடங்கள் குறிப்புகள்
அசீம்-ஓ-ஷான் ஷாகின்ஷா முகமது அஸ்லாம், போனி சக்ரபோர்த்திமற்றும் குழுவினர் 5:54 ரித்திக் ரோஷனும்ஐஸ்வர்யா ராயும்
ஜான்-ஈ-பஹாரா ஜாவேத் அலி 5:15 ரித்திக் ரோஷனும் & ஐஸ்வர்யா ராயும்
க்வாஜா மேரே க்வாஜா ஏ.ஆர்.ரஹ்மான் (பாடல் : காஷிப்) 6:56 ஹைதர் அலி [அமின் ஹாஜீ] [கரீம் ஹாஜீ] ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய்
இன் லமோன் கே தாமன் மேய்ன் சோனு நிகமும்மதுஸ்ரீயும் 6:37 {{0}ரித்திக் ரோஷனும் & ஐஸ்வர்யா ராயும்
மன் மோகனா பேலா ஷிண்டே 6:50 ரித்திக் ரோஷனும் & ஐஸ்வர்யா ராயும்
ஜான்-ஈ -பஹாரா வாத்தியம்- புல்லாங்குழல் 5:15 வாத்திய இசை
க்வாஜா மேரே க்வாஜா வாத்தியம் - ஒபோ 2:53 வாத்திய இசை

குறிப்புகள்

  1. Business data for Jodhaa Akbar from IMDb
  2. "Box Office earnings in 2008". Archived from the original on 2012-05-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  3. "Aishwarya gets summons by Customs Department". IndiaFM. 2006-11-15. பார்க்கப்பட்ட நாள் 2007-10-03.
  4. "December 27, 2008". JodhaaAkbar.com. 2008-12-03. Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2007-12-05.
  5. 5.0 5.1 "Jodhaa Akbar wins Audience Award at Sao Paulo International Film Fest". Business of Cinema. 2008-11-03. Archived from the original on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19. {{cite web}}: Unknown parameter |accesdsate= ignored (help)
  6. 6.0 6.1 "Jodhaa Akbar, Hrithik win awards at Golden Minbar Film Festival in Russia". Bollywood Hungama. October 23, 2008. {{cite web}}: Text "2009-01-31" ignored (help)
  7. 7.0 7.1 "Awards for Jodhaa Akbar (2008)". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 2009-01-31.
  8. 8.0 8.1 "Film Critic Top Ten Lists: 2008 Critics' Picks". Metacritic. Archived from the original on 2010-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-04-25.
  9. "Jodhaa Akbar :: Official Website". Jodhaaakbar.com. Archived from the original on 2009-05-12. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
  10. "Jodhaa Akbar not being screened in Rajasthan". IndiaFM. 2008-02-16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  11. 11.0 11.1 11.2 Ashley D'Mello (2005-12-10). "Fact, myth blend in re-look at Akbar-Jodha Bai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/1326242.cms. பார்த்த நாள்: 2008-02-15. 
  12. Syed Firdaus Ashraf (2008-02-05). "Did Jodhabai really exist?". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
  13. Atul Sethi (2007-06-24). "'Trade, not invasion brought Islam to India'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/India/Trade_not_invasion_brought_Islam_to_India/articleshow/2144414.cms. பார்த்த நாள்: 2008-02-15. 
  14. "UP bans screening of Jodhaa Akbar". NDTV. 2008-03-02. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  15. "Court moved against ban on film". The Hindu. 2008-03-02. Archived from the original on 2008-03-05. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  16. "Supreme Court lifts ban on Jodhaa Akbar, for now". Reuters. 2008-03-03. பார்க்கப்பட்ட நாள் 2008-03-04.
  17. [javascript:void(0); Oneindia.in][தொடர்பிழந்த இணைப்பு]
  18. "BoxOffice India.com". Boxofficeindia.com. Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
  19. "And the rest isn't history- Hindustan Times". Hindustantimes.com. Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
  20. Jodhaa Akbar @ Rotten Tomatoes
  21. ஜோதா அக்பர்
  22. [48] மசாந்தின் தீர்ப்பு: ஜோதா அக்பர் பரணிடப்பட்டது 2008-11-13 at the வந்தவழி இயந்திரம்
  23. ஜோதா அக்பர்
  24. ஜோதா அக்பர்
  25. Rachel Saltz (Published: February 16, 2008). "Jodhaa Akbar - Movie - Review - The New York Times". Movies.nytimes.com. http://movies.nytimes.com/2008/02/16/movies/16akba.html?ref=movies. பார்த்த நாள்: 2008-10-27. 
  26. [53] ^மற்றவை வரலாறு அல்ல[தொடர்பிழந்த இணைப்பு]
  27. http://www.bollywoodhungama.com/features/2009/02/16/4855/index.html
  28. http://www.indiantelevision.com/aac/y2k8/aac796.php

புற இணைப்புகள்

வார்ப்புரு:End
விருதுகள்
முன்னர்
தாரே ஜமீன் பர்
Filmfare Best Movie Award
2009
பின்னர்
NA
"https://tamilar.wiki/index.php?title=ஜோதா_அக்பர்&oldid=28189" இருந்து மீள்விக்கப்பட்டது