ஜெ. பிரான்சிஸ் கிருபா
Jump to navigation
Jump to search
ஜெ. பிரான்சிஸ் கிருபா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஜெ. பிரான்சிஸ் கிருபா |
---|---|
பிறந்ததிகதி | 1974 - 16 செப்டம்பர் |
இறப்பு | 2021 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ஜெ. பிரான்சிஸ் கிருபா (1974 - 16 செப்டம்பர், 2021) ஒரு தமிழ்நாட்டுப் புதுக்கவிதை எழுத்தாளர் ஆவார்.
தொடக்க வாழ்க்கை
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த பத்தினிப்பாறை என்னும் சிற்றூரில் 1974-இல் பிறந்த பிரான்சிஸ் கிருபா, பள்ளிப்படிப்புடன் கல்வியை நிறுத்திக்கொண்டார்.
படைப்புகள்
எட்டு கவிதைத் தொகுப்புகளையும் கன்னி என்ற புதினத்தையும் இயற்றியுள்ளார். காமராஜ் (2004) திரைக்கதைக்கும் தேவதேவன் பற்றிய குறும்படத்துக்கும் பங்களித்துள்ளார்.[1]
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
2003 | மெசியாவின் காயங்கள் | கவிதைத் தொகுப்பு | |
2005 | நிழலன்றி ஏதுமற்றவன் | ||
2006 | கன்னி | புதினம் | |
2008 | மல்லிகைக் கிழமைகள் | கவிதைத் தொகுப்பு | |
2009 (?) | வலியோடு முறியும் மின்னல் | தமிழினி பதிப்பகம் | |
2012 | ஏழுவால் நட்சத்திரம் | ||
2016 | சம்மனசுக் காடு | ||
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள் | |||
2019 | சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் | படிகம் வெளியீடு |
விருதுகள்
ஆண்டு | விருது | வழங்கியவர் / அமைப்பு | குறிப்பு |
---|---|---|---|
2007 | சிறந்த புதினம் | ஆனந்த விகடன் | கன்னி புதினத்துக்காக |
2008 | சுந்தர ராமசாமி விருது | நெய்தல் இலக்கிய அமைப்பு | கவிதைகளுக்காக |
2017 | சுஜாதா அறக்கட்டளை விருது[2] | சுஜாதா அறக்கட்டளை | சம்மனசுக்காடு தொகுப்புக்காக |
? | மீரா விருது | மெசியாவின் காயங்கள் தொகுப்புக்காக[1] |
மறைவு
இவர் 16 செப்டம்பர் 2021 அன்று காலமானார்.[3] அவர் உடல் பத்தினிப்பாறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 #மல்லிகைக் #கிழமைகள் (#கவிதைத் #தொகுப்பு) - #கவிஞர் #ஜெ. #பிரான்சிஸ் #கிருபா., retrieved 2022-10-27
- ↑ "விடுபூக்கள்: சுஜாதா விருதுகள் 2017". தி இந்து. http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D2017/article9674562.ece. பார்த்த நாள்: 17 மே 2019.
- ↑ "'இருள் என்பது கறுப்பு வெயில்' - கவிஞர் பிரான்சிஸ் கிருபா மரணம் - ETV Bharat". 17 செப்டம்பர் 2021. https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/poet-francis-kiruba-is-no-more/tamil-nadu20210917033830639.