ஜெய் பீம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜெய் பீம்
இயக்கம்டி. செ. ஞானவேல்
தயாரிப்புசூர்யா
ஜோதிகா
கதைடி. செ. ஞானவேல்
இசைஷான் ரோல்டன்
நடிப்புசூர்யா
பிரகாஷ் ராஜ்
ரஜிஷா விஜயன்
லிஜோமோல் ஜோஸ்
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்2டி என்டேர்டைன்மென்ட்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடு2 நவம்பர் 2021 (2021-11-02)
ஓட்டம்164 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜெய் பீம் (Jai Bhim) 2021 நவம்பர் 2 ஆம் தேதி வெளியான இந்திய தமிழ் மொழி சட்ட நாடகத் திரைப்படமாகும். டி. செ. ஞானவேல் இயக்கிய[2] இப்படத்தை 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.[3] இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

1993இல் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தின் அடிப்படையில், இது இருளர் சாதியைச் சேர்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியினரைப் பின்தொடர்கிறது.[4][5] ராஜாகண்ணு திட்டமிட்டு காவலர்களால் தாக்கப்படுகிறார். செய்யாத தப்பை ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்படுகிறார்.[4][6] பின்னர் காவல் நிலையத்தில் அவர் காணாமல் போகிறார். செங்கேணி தனது கணவருக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சந்துருவின் (சூர்யா) உதவியை நாடுகிறார்.[7]

ஏப்ரல் 2021இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, படம் அந்த மாதத்தில் முதன்மை புகைப்படம் எடுக்கத் தொடங்கியது. பல காட்சிகள் சென்னை மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டன. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தயாரிப்பு நிறுத்தப்பட்டு ஜூலை 2021 இல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, செப்டம்பரில் நிறைவடைந்தது. எஸ். ஆர். கதிர் படத்தின் ஒளிப்பதிவையும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

வெளியீடு

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில், தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, 2 நவம்பர் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டு சரியான தேதியில் மொத்தம் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியானதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னட, இந்தி மொழிகளிலும் இந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Suriya's Jai Bhim censored with A certificate". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 11 October 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
  2. "Suriya to team up with Kootathil Oruvan director TJ Gnanavel?". இந்தியா டுடே. Archived from the original on 8 October 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
  3. "Suriya turns busy shooting for a couple of films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 April 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
  4. 4.0 4.1 "Suriya's 'Jai Bheem' is based on a 1993 legal battle". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 August 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
  5. "Suriya's lawyer avatar in Jai Bhim". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 26 July 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
  6. "Is Suriya's 'Jai Bheem' based on a real incident?". IndiaGlitz. 31 July 2021. Archived from the original on 2 August 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
  7. "Suriya to play a lawyer in next flick". DT Next. 22 March 2020. Archived from the original on 11 October 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெய்_பீம்_(திரைப்படம்)&oldid=38029" இருந்து மீள்விக்கப்பட்டது