சௌந்தரா கைலாசம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சௌந்தரா கைலாசம் |
---|---|
பிறந்ததிகதி | பெப்ரவரி 28, 1927 |
இறப்பு | அக்டோபர் 15 2010 |
சௌந்தரா கைலாசம் (பெப்ரவரி 28, 1927 - அக்டோபர் 15 2010) தமிழக எழுத்தாளர் புகைப்படத்திற்கு நன்றி NAKARAJAN. எளிதாகப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் பல கவிதைகளை எழுதியவர். சிலேடைகளைக் கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாட்டில் கரூர் அருகில் உள்ள செட்டிபாளையத்தில் பிறந்த சௌந்தரா, தனது 15வது வயதில் பி. எஸ். கைலாசத்தை (நீதிபதி) திருமணம் செய்துகொண்டார். 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 9ம் வகுப்பு வரை படித்துள்ள சௌந்தரா கைலாசம் பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்தும் தோய்ந்தும் தாமே பாடல் இயற்றத் தொடங்கினார். தமிழறிஞர்கள் உள்பட பலரும் இவர் முயற்சிகளைப் பாராட்டி ஊக்கமூட்டியுள்ளனர். இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்றுள்ள இவர், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
பிறப்பும் இளமைப்பருவமும்
தமிழ்நாட்டில் கரூர் அருகில் உள்ள செட்டிபாளையத்தில் பிறந்த சௌந்தரா, தனது 15வது வயதில் பி.எஸ். கைலாசத்தை (நீதிபதி) திருமணம் செய்து கொண்டார். 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 9ம் வகுப்பு வரை படித்துள்ள சௌந்தரா கைலாசம் பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்தும் தோய்ந்தும் தாமே பாடல் இயற்றத் தொடங்கினார்.
சொந்த வாழ்க்கையும் , கணவர் பற்றும்
தனது 14 வது ஆண்டில்,சௌந்திரா திரு. பி.எஸ். கைலாசத்தை மணந்து கொண்டார் . பி.எஸ்.கைலாசம் ,அப்போது புகழ் பெற்ற வழக்கறிஞர் வி .எல் .எத்திராஜ் வழிகாட்டுதலின் கீழ் ஜூனியர் வக்கீலாய் வேலை பார்த்தார் .பி.எஸ். கைலாசம் சௌந்தராவின் இலக்கிய நடவடிக்கைகளை ஊக்குவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். மாணாக்கர்கள் அவரை ஒரு வாய்வீச்சு போட்டியில் ஒரு நீதிபதியாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விரிவுரையை வழங்கும்படி நிர்பந்திக்கப்பட்டார், அவரது முதல் பேச்சு உரையாட அனைவரின் பாராட்டையும் பெற்றார் .இதுவே முதல் தூண்டுகோல் ஆயிற்று .
இவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயார் .முன்னாள் நீதிபதி கைலாசத்தின் மனைவியான சௌந்தரா கைலாசம், தன் கணவரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் எழுதும் கடிதங்களில் ”நாதன் தாள் வாழ்க” என்றே முத்திரையிடுவார்.
இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார்.அகில இந்திய வானொலியில் பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்றுள்ள இவர், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
எழுதிய நூல்கள்
- சௌந்தரா கைலாசத்தின் கவிதைகள்
- கவிதை பூம்பொழில்
- எழுத்துக்கு வந்த ஏற்றம்
- உள்ளத்தில் நிறைந்த உத்தமர்கள்
- அளவற்ற அருளாளர்
- இறைவன் சோலை
- இதயப் பூவின் இதழ்கள்
- நெஞ்சில் விளைந்த நித்திலங்கள்
- சிந்தை வரைந்த சித்திரங்கள்
இவை தவிர கட்டுரை, சிறுகதை நூல்களையும் படைத்துள்ளார்.
வெளி இணைப்புகள்
- கவிதாயினி சௌந்தரா கைலாசம் காலமானார், தினமணி, அக்டோபர் 16, 2010
- செளந்தரா கைலாசம், அண்ணாகண்ணன்