பி. எஸ். கைலாசம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பி. எஸ். கைலாசம் (பிறப்பு: 12 செப்டம்பர் 1915) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்[1].

வாழ்க்கைக் குறிப்பு

சேலத்தில் பிறந்த கைலாசம் சென்னை மயிலாப்பூரில் உள்ள பி. எஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்ற பிறகு நீதிபதிகள் பி. வி. ராஜமன்னார், கே.சுப்பாராவ் ஆகியோரின் வழிகாட்டுதலில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டார்.

கைலாசத்தின் மனைவி சௌந்தரா கைலாசம் தமிழ்க் கவிஞர் ஆவார். இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் மேனாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் என்பவரின் மாமனார் கைலாசம் ஆவார்.

நீதிபதியாக

வழக்கறிஞராக, அரசுத் தரப்பு வழக்குரைஞராக, அட்வகேட் ஜெனரலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிசெய்து பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார். சிறிது காலம் கழித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக அமர்த்தப்பட்டார். 3 சனவரி 1977 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

பெற்ற சிறப்புகள்

  • இவரின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட்டது[2][3][4]

மேற்கோள்கள்

  1. "Former Judges". Supreme Court Of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2016.
  2. "Commemorative Stamp in Honour of Justice Kailasam". The Indian Express. 14 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2016.
  3. "நீதித் துறையை தன்னிச்சையாக முடிவெடுக்க விட வேண்டும்:தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல்". தினமணி. 13 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2016.
  4. "Fearless people should be appointed judges: S.K. Kaul". The Hindu. 13 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2016.

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._எஸ்._கைலாசம்&oldid=28020" இருந்து மீள்விக்கப்பட்டது