செம்பி
செம்பி | |
---|---|
தயாரிப்பு | ஆர். இரவீந்திரன் அஜ்மல் கான் ரெயா |
கதை | பிரபு சாலமன் |
இசை | நிவாஸ் கே பிரசன்னா |
நடிப்பு | கோவை சரளா அசுவின் குமார் லட்சுமி காந்தன் தம்பி ராமையா நாஞ்சில் சம்பத் |
ஒளிப்பதிவு | எம். ஜீவன் |
படத்தொகுப்பு | புவன் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | 30 திசம்பர் 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செம்பி (Cempi) என்பது பிரபு சாலமன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் சாகச நாடகத் திரைப்படம். இப்படத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார் லட்சுமி காந்தன், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 30 திசம்பர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
கதை
பத்து வயது செம்பி மற்றும் அவளது பாட்டி வீரத்தாய் (கோவை சரளா) ஆகியோர், கொடைக்கானலின் மலைப்பகுதிகளில் இயற்கையின் மத்தியில் அமைதியாக வாழ்கிறார்கள். செல்வாக்கு மிக்க மூன்று குற்றவாளிகள், செம்பியை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் கனவுகளை சிதைத்து விடுகின்றனர். ஒரு காவல் அதிகாரி செம்பியைத் தாக்கி, வழக்கை திரும்ப்ப் பெறும்படி அவளது பாட்டியை வற்புறுத்தும்போது, அவர்கள் அந்த அதிகாரியை அடித்துக் கொன்று விடுகின்றனர். "உன்னை நேசிப்பது போல் உன் அண்டை வீட்டாரையும் நேசி" என்பது படத்தின் அடிப்படைக்கருத்து.
நடிகர்கள்
- வீரத்தாயியாக கோவை சரளா
- அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன்
- தம்பி ராமையா
- நாஞ்சில் சம்பத்
- பாலா. கருப்பையா
- ஜி.ஞானசம்பந்தம்
- முல்லை அரசி
இசை
Track listing | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | Singer(s) | நீளம் | |||||||
1. | "ஆத்தி எம் மேல" | வந்தனா சீனிவாசன் | 4:33 | |||||||
2. | "யாருக்கும் யாரு மேல" | நிவாசு கே.பிரசன்னா, தரிணி அரிகரன், பிரபு சாலமன் | 3:35 | |||||||
3. | "என்னத்த நான்" | நிவாசு கே.பிரசன்னா, வந்தனா சீனிவாசன் | 3:54 | |||||||
4. | "உயிராகி" | நிவாசு கே.பிரசன்னா | 3:54 | |||||||
5. | "கம்மங்கூழு கருவாடு" | வேல்முருகன், எம்.கே.பாலாசி | 3:15 | |||||||
6. | "தெரு தெருவா" | வி.எம்.மகாலிங்கம் | 4:13 | |||||||
மொத்த நீளம்: |
22:51 |
அறிமுகம்
இந்தத் திரைப்படம் த்ரிஷா நடித்த ராங்கி படத்துடன் 30 டிசம்பர் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[1][2] படத்தின் டிரெய்லர் 16 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது [3] படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் அருகே படமாக்கப்பட்டது.[4]
இப்படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இயக்குநருடன் முதல் முறையாக இணைந்துப் பணியாற்றியுள்ளார்.[5] "ஆத்தி என் மேல" என்ற தலைப்பில் முதல் தனிப்பாடல் 28 அக்டோபர் 2022 [6] வெளியிடப்பட்டது.
சான்றுகள்
- ↑ "'Djinn', 'Sembi', 'Raangi' & More: South Films to Watch This New Year's Weekend". The Quint. 29 December 2022.
- ↑ "Prabhu Solomon's Sembi gets a release date". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 25 November 2022. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Prabhu Solomon's Sembi gets a new trailer". சினிமா எக்ஸ்பிரஸ். 16 December 2022.
- ↑ "Kovai Sarala: What I wish never happens, but 'Sembi' fulfilled a long-time dream". The Hindu. Archived from the original on 27 December 2022. பார்க்கப்பட்ட நாள் 27 December 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "'Sembi will be a wholesome entertainer'". DT Next. 30 December 2022.
- ↑ "Aathi En Mela (From "Sembi") Songs Download". JioSaavn.