சுந்தர சோழன்
இரண்டாம் பராந்தகன் | |
---|---|
ராஜகேசரி, மதுரைகொண்ட இராஜகேசரிவர்மன், பொன்மாளிகை துஞ்சிய தேவர் | |
சோழப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 958 – 973 |
முன்னையவர் | கண்டராதித்த சோழன் |
பின்னையவர் | உத்தம சோழன் |
சோழ இணை ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 957 (சில மாதங்கள்) |
பேரரசர் | அரிஞ்சய சோழன் |
முன்னையவர் | கண்டராதித்த சோழன் |
ஆட்சிக்காலம் | கி.பி. 955 – 958 |
பேரரசர் | கண்டராதித்த சோழன் |
பின்னையவர் | ஆதித்த கரிகாலன் |
பிறப்பு | தஞ்சாவூர், சோழ நாடு (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | கி.பி. 980 காஞ்சிபுரம், சோழர் (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
அரசி | வானவன்மாதேவி |
குழந்தைகளின் பெயர்கள் | ஆதித்த கரிகாலன் குந்தவை முதலாம் இராஜராஜ சோழன் |
அரசமரபு | சோழர் |
தந்தை | அரிஞ்சய சோழன் |
தாய் | கல்யாணி (வைதும்ப குடும்ப இளவரசி)[1] |
மதம் | சைவ சமயம் |
சோழ மன்னர்களின் பட்டியல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முற்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
மாற்றார் இடையாட்சி | ||||||||||||||||||||||||||||
இடைக்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சாளுக்கிய சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சோழர் சமூகம் | ||||||||||||||||||||||||||||
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவராக விளங்கியவர் இராசகேசரி வர்மன் சுந்தர சோழர். இவர் பொ.ஊ. 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டார். இவர் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவார். இவர் இயற்பெயர் இரண்டாம் பராந்தகன் ஆகும், இவர் ஆண் அழகில் மன்மதனாக இருந்ததால் மக்கள் இவரை சுந்தர சோழன் என்று அழைத்தனர். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவர் இவர். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டார். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினார்.
பொ.ஊ. 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழரின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டார். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று பொ.ஊ. 973 ல் காலமானார்.
சுந்தரசோழருக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.
காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழர் இறந்தார். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டார். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வம்சத்து 'வானவன் மாதேவி' என்ற இவர் மனைவி, கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறினார். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவர் மகள் 'குந்தவையால்' தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.
தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.
சுந்தர சோழரின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் இராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தார்.
வீர சோழியம்
வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூல் இம்மன்னனின் புகழைக் கூறும்போது, அபிபெருமன்னன் பழையாறைத் திருக்கோயிலில் இருந்த இந்திரன், சூரியதேவன் ஆகிய திருமேனிகளுக்கு யானையையும், 7 குதிரைகளையும் (வாகனங்களை) அளித்ததோடு சிவபெருமான் திருவுலாக் காண்பதற்காக பல்லக்கினையும் அளித்தான் என்று கூறுகிறது. [2]