சுகாசினி (தெலுங்கு நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுகாசினி
பிறப்பு1988
சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சுகா
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003– தற்போது வரை.
வாழ்க்கைத்
துணை
தர்மா (திருமணம்.2016)

சுகாசினி (Suhasini) ஒரு இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக தெலுங்கு மொழிப் படங்களில் தோன்றியுள்ளார். தெலுங்குத் திரையுலகில் 2003 ஆம் ஆண்டில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தெலுங்கு படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்தார். தொலைக்காட்சியில் அறிமுகமாகும் முன் பல தமிழ் மற்றும் போச்புரித் திரைப்படங்களில் தோன்றினார்.

தொழில்

இந்தியாவின் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் . நடிகையும், இயக்குநருமான பி. ஜெயா இயக்கத்தில் வெளியான சண்டிகாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நான்கு தமிழ் படங்களில் நடித்தார். [1] தனது முதல் தமிழ் படமான அது என்ற திகில் திரைப்படத்தில் இவர் ஒரு ஆவியாக நடித்தார். [2] தி இந்து விமர்சகர் "மிகவும் வெளிப்படையானவர்" என்று குறிப்பிட்டார். [3] பின்னர் இவர் யக்னம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறு ஆக்கமான ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த மண்ணின் மைந்தன் நடித்தார். [4] [5] இந்த படத்தில் இவரது நடிப்பு பற்றி, தி இந்து எழுதியது: "பாடல் காட்சிகளில் சுகா அழகாக இருக்கிறார். மேலும் உணர்ச்சிவசப்படுத்தவும் முயற்சித்துள்ளார்". [6] நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் நவீன் அறிமுகமான "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு" என்ற படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். [7] [8] ஆனால், இவரது அனைத்து தமிழ் திட்டங்களும் தோல்வியடைந்தன. [9] [10]

தெலுங்குத் திரை

பின்னர் இவர் தெலுங்குத் திரைபடங்களுக்குத் திரும்பினார். அடுத்த ஆண்டுகளில், சுந்தரானிகி தோண்டரேக்குவா போன்ற குறைந்த சுயவிவரப் படங்களில் நடித்தார். இதில் இவரது சண்டிகாடு படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் பாலாதித்யாவுடன் நடித்திருந்தார். [11] பின்னர், குணா, [12] பிரேமா சரித்ரா, நெடுஞ்சாலை, சண்டாடி [13] அல்லது கோகிலா, [14] பூக்கைலாஸ், [15] இலட்சுமி கல்யாணம், [16] பாண்டுரங்கடு [17] , புன்னமி நாகு போன்ற திட்டங்களில் துணை வேடங்களில் தோன்றினார். இடையில், வெங்கட் பிரபு, எஸ்.பி.பி சரண் ஆகியோருடன் இணைந்து ஞாபகம் வருதே என்ற மற்றொரு தமிழ் வெளியீட்டைக் கொண்டிருந்தார். [18] மேலும் பா பேக சந்தமாமா படத்தில் கன்னடத்திலும் அறிமுகமானார். [19]

தொலைக்காட்சிகளில்

2010 ஆம் ஆண்டில், இவர் தொலைக்காட்சியில் இறங்கினார். தெலுங்குத் தொலைக்காட்சித் தொடரான அபரஞ்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். [20] இத்தொடர் 300 வாரங்களை நிறைவு செய்தது. [21] இவர் நடித்திருந்த, அனுபந்தாலு (நடிகை மீனாவிற்கு மாற்றாக) இவருக்கு, சிறந்த நடிகைக்கான 2011 ஆந்திர சினிகோயர் விருதினை பெற்றுத்தந்தது. மேலும், அஷ்ட சம்மா என்ற தொடரிலும் ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். [22] "சிவசங்கரி" என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். பிறகு, சூப்பர் குட் பிலிம்ஸின் தமிழ்த் திரைப்படமான பிள்ளையார் தெரு கடைசி வீடு [23] என்பதிலும், தெலுங்கு பக்தி படமான சிறீ வாசவி வைபவம், [24] ஆகியவற்றில் முக்கிய வேடங்களில் நடித்தார். மேலும், சுதீப் பாண்டேவுடன் இரண்டு போச்புரி படங்களில் நடித்தார்.

திருமணம்

பிப்ரவரி 2015 இல், இவரது புதிய தொலைக்காட்சித் தொடரான இத்தரு-அம்மாயிலு ஜீ தெலுங்கில் தொடங்கியது. Http://www.zeetelugu.com/shows/iddaru-ammayilu பரணிடப்பட்டது 2016-04-04 at the வந்தவழி இயந்திரம் ஐப் பார்க்கவும் பரணிடப்பட்டது 2016-04-04 at the வந்தவழி இயந்திரம் . அதே ஆண்டில், இந்தத்தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தர்மா என்ற துணை நடிகருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

குறிப்புகள்

  1. "Set to make her space". The Hindu.
  2. "From `ghost' to heroine". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  3. "The Hindu : Entertainment / Film Review : Adhu". Archived from the original on 2004-12-15. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  4. "Behindwoods : A Villian's hit!".
  5. "Penning lines for a remake". Archived from the original on 2005-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  6. "The Hindu : Entertainment Chennai / Film Review : "Mannin Mainthan"". Archived from the original on 2014-11-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  7. "Fire at the film launch!". Sify. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  8. "From `ghost' to heroine". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  9. "Sneha emerged on top among Tamil heroines".
  10. "'Koundamani and I may pair up again'". The Times of India.
  11. "CineGoer.com - Gallery - Events - Sundaraniki Tondarekkuva Press Meet". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  12. "Gana Review - Telugu Movie Reviews - IndiaGlitz.com - IndiaGlitz.com". IndiaGlitz. Archived from the original on 2006-11-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  13. "Sandadi audio released". www.filmibeat.com.
  14. "Wholesome entertainer". The Hindu.
  15. "Bhukailas Review - Telugu Movie Reviews - IndiaGlitz.com". IndiaGlitz.
  16. "Lakshmi Kalyanam Review - Telugu Movie Reviews - IndiaGlitz.com". IndiaGlitz.
  17. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Suhasinis-sixth-sense/articleshow/2945164.cms
  18. "Amateur attempt". The Hindu.
  19. "Review: Baa Bega Chandamama".
  20. "Bonding on screen". The Hindu.
  21. Y Sunita Chowdhary. "Tagged in twisted tales". The Hindu.
  22. Reporter. "Gemini sweeps AP Cinegoers' awards". The Hindu.
  23. "Pillaiyar Theru Kadaisi Veedu". The New Indian Express.
  24. m. l. narasimham. "Devotional tale". The Hindu.

வெளி இணைப்புகள்