சித்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்தா
Chithha
திரையரங்க வெளியீடு
இயக்கம்எசு. யு. அருண்குமார்
தயாரிப்புசித்தார்த்
இசை
நடிப்பு
  • சித்தார்த்
  • நிமிசா சாஜாயன்
ஒளிப்பதிவுபாலாஜி சுப்ரமணியன்
படத்தொகுப்புசுரேஷ் ஏ. பிரசாத்
கலையகம்ஏடாகி எண்டெர்டெயிண்ட்மென்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு28 செப்டம்பர் 2023 (2023-09-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சித்தா (திரைப்படம்)(Chithha) என்ற தலைப்பு சித்தப்பா என்பதன் சுருக்கம். இத்திரைப்படத்தினை இயக்கியவர் அருண்குமார் ஆவார்.[1] அப்பாவின் தம்பியே சித்தப்பா. சித்தப்பாவின் உணர்வுபூர்வமான பாசத்தை இந்தத் திரைப்படம் பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2023 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றது இத் திரைப்படம்.

பழனியைச் சேர்ந்த அரசு ஊழியரான ஈசுவரன் தனது மூத்த சகோதரர் இறந்த பிறகு அவருடைய மகள் சுந்தரி தாயார், அண்ணியுடன் வசித்து வருகிறார். அவர் தனது சகோதரரின் குடும்பத்தினருடம் மிகுந்த பாசத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றார். குறிப்பாக சுந்தரி மீது அதிக அன்பு செலுத்துகிறார், எப்போதும் அவளைப் பாதுகாத்து வருகிறார். ஒரு நாள் திடீரென சுந்தரி ஒரு மோசமான சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் மற்றும் பலாத்காரத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர்களால் கடத்தப்படும்போது, இவரது வாழ்க்கை மாறுகிறது, இறுதியில், பழி அவர் மீதே விழுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

நடிகர்கள்

  • ஈசுவரன் ஆக சித்தார்த், சுந்தரியின் சித்தப்பா (சித்தா)[2]
  • சக்தியாக ஈஸ்வரனின் காதலியாக நிமிஷா சஜயன்,
  • ஈஸ்வரனின் மருமகள் சுந்தரி "சேட்டை"யாக சஹஸ்ர ஸ்ரீ
  • சுந்தரியின் அம்மாவாக ஈஸ்வரியின் அண்ணியாக அஞ்சலி நாயர்

மேற்கோள்கள்

  1. "Chithha: Siddharth's thriller flick gets a release date, makers reveal a new poster. Details inside". ottplay.com. Archived from the original on 24 August 2023. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
  2. "Here's the first review of Siddharth's 'Chiththa'". The Times of India. 22 September 2023. Archived from the original on 24 September 2023. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சித்தா&oldid=32832" இருந்து மீள்விக்கப்பட்டது