சிதம்பரச் செய்யுட்கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிதம்பரச் செய்யுட்கோவை [1] [2] ஒரு கோவை இலக்கிய நூல். இது இலக்கிய அமைதியுடன் கூடிய நூல் ஆயினும் இலக்கணச் சிறப்புக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர். வைணவம் சார்ந்த பாப்பாவினம் என்னும் நூலின் அமைப்பைத் தழுவி அமைந்த இந்நூல் சைவச் சார்பு கொண்டது. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற இலக்கண நூல்கள் சமண சமயம் சார்ந்தவை ஆதலால், வைணவ, சைவ சமயச் சார்புடன் கூடிய இலக்கண நூல்களின் தேவைகருதி இந்நூல்களை இயற்றியதாகக் கருதப்படுகின்றது[3].

அமைப்பு

இந்நூலில் வெண்பா விகற்பம், வெண்பாவினம், ஆசிரியப்பா விகற்பம், ஆசிரியப்பாவினம், கலிப்பா விகற்பம், கலிப்பாவினம், வஞ்சிப்பா விகற்பம், வஞ்சிப்பாவினம், மருட்பா ஆகிய ஒன்பது பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் மொத்தம் 84 எடுத்துக் காட்டுகள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

குறிப்புகள்

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 107. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
  3. இளங்குமரன், 2009. பக். 356.
"https://tamilar.wiki/index.php?title=சிதம்பரச்_செய்யுட்கோவை&oldid=13370" இருந்து மீள்விக்கப்பட்டது