சம்சாரம் (1951 திரைப்படம்)
சம்சாரம் 1951-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சந்துருவின் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது. தெலுங்கில் 1950 இல் இதே தலைப்பில் வெளியான சம்சாரம் திரைப்படத்தையே தமிழில் ஜெமினி ஸ்டூடியோஸ் எஸ். எஸ். வாசன் தயாரித்தார். ஒரே சமயத்தில் இது சன்சார் என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தித் திரைப்படத்தை எஸ். எஸ். வாசன் இயக்கியிருந்தார். தமிழ்த் திரைப்படத்தில் எம். கே. ராதா, புஷ்பவல்லி, டி. ஆர். இராமச்சந்திரன், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] 1951 தீபாவளி அன்று இது வெளியானது.
சம்சாரம் | |
---|---|
சம்சாரம் தமிழ்த் திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | சந்துரு |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் |
கதை | கி. ரா. |
மூலக்கதை | சம்சாரம் (1950 தெலுங்குத் திரைப்படம்) |
இசை | ஏமனி சங்கர சாஸ்திரி எம். டி. பார்த்தசாரதி |
நடிப்பு | எம். கே. ராதா புஷ்பவல்லி குமாரி வனஜா சிறீராம் சுந்தரிபாய் டி. ஆர். இராமச்சந்திரன் டி. பாலசுப்பிரமணியம் ஆர். பாலசுப்பிரமணியம் மாஸ்டர் சேது கே. என். கமலம் கமலவேணி அம்மாள் |
பாடலாசிரியர் | கொத்தமங்கலம் சுப்பு |
ஒளிப்பதிவு | பி. எல்லப்பா |
படத்தொகுப்பு | எம். உமாநாத் ராவ் |
கலையகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 19.10.1951[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி |
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 6-01-2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170106053621/http://www.lakshmansruthi.com/cineprofiles/1951-cinedetails8.asp.
- ↑ ராண்டார் கை (6-12-2014). "Samsaram 1951". தி இந்து இம் மூலத்தில் இருந்து 03-01-2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103101240/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-samsaram-1951/article6668028.ece. பார்த்த நாள்: 2-112016.