சத்தீசுகர் அரசு
| தலைமையிடம் | இராய்ப்பூர் |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர் | அனுசுயா யுகே |
| முதலமைச்சர் | பூபேஷ் பாகல் |
| தலைமைச் செயலாளர் | அமிதாப் ஜெயின், இ.ஆ.ப |
| சட்டவாக்க அவை | |
| சட்டப் பேரவை |
|
| சபாநாயகர் | சரண் தாஸ் மஹந்த் |
| துணை சபாநாயகர் | மனோஜ் சிங் மாண்டவி |
| உறுப்பினர்கள் | 91 (90+1) |
| நீதித்துறை | |
| உயர் நீதிமன்றம் | சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்[1] |
| தலைமை நீதிபதி | அருப் குமார் கோஸ்வாமி |
சத்தீசுகர் அரசு, சத்தீசுகர் மாநில அரசாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டமியற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் தலைமையகம் இராய்ப்பூரில் உள்ளது.
சட்டவாக்கம்
சத்தீசுகர் சட்டமன்றம் 91 (90+ஒருவர் நியமனம் செய்யப்பட்டவர்கள்) உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். கூடுதலாக ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.[2]
ஆளுநர்
ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்
தற்பொழுதைய ஆளுநர் அனுசுயா யுகே.
முதல்வர்
தற்பொழுதைய முதலமைச்சராக பூபேஷ் பாகல் அவர்கள் பதவியில் உள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. Retrieved 2008-05-12.
- ↑ "Chhattisgarh Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. Retrieved 2008-05-12.