சக்ரதாரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சக்ரதாரி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புவி. நாகையா
ஜெமினி கணேசன்
நாகர்கோவில் கே. மகாதேவன்
எல். நாராயணராவ்
புஷ்பவல்லி
சூர்ய பிரபா
கே. என். கமலம்
எஸ். வரலட்சுமி
துளசி
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புஎன். கே. கோபால்
வெளியீடுதிசம்பர் 3, 1948
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்ரதாரி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, புஷ்பவல்லி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். டி. பார்த்தசாரதி இசையமைக்க பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியன் ஆகியோர் பாடல்களை இயற்றினர்.[1] குயவராகப் பிறந்து வைணவ பக்தராகி, பாண்டுரங்கனின் பாதநிழலை அடைந்த பக்த கோரா கும்பரின் கதையைத் திரைப்படமாக ஜெமினி நிறுவனத்தினர் தயாரித்திருந்தனர்.[2]

நடிப்பு

பாடல்கள்

பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியன் ஆகியோரின் பாடல்களுக்கு வி. நாகையா, டி. வி. ரத்தினம், எம். கல்பகம் ஆகியோர் பாடியுள்ளனர். எம். டி. பார்த்தசாரதி இசையமைத்திருந்தார்.[2] எம். டி. பார்த்தசாரதி

  • ரங்கன் கருணையாலே (நடிப்பு, பாடல்: வி. நாகையா)
  • பாண்டுரங்கா பாண்டுரங்கா (நடிப்பு, பாடல்: வி. நாகையா)
  • வா வா அம்புலியே (நடிப்பு: புஷ்பவல்லி, பாடல்: டி. வி. ரத்தினம்)
  • உனக்கும் எனக்கும் என்ன பொருத்தமையா (நடிப்பு, பாடல்: வி. நாகையா)
  • கண்ணாலே வெட்டாதே என்னையே
  • அய்யாமாரே வாங்க அம்மாமாரே வாங்க (நடிப்பு புதுக்கோட்டை சீனு, இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு)
  • கொளுந்து வெத்திலே நல்ல சிவந்த வெத்திலே (நடிப்பு: எஸ். ஆர். லட்சுமி, இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு)
  • ஓ ஓ பட்டுவெள்ளைக் கங்கணம் (நடிப்பு: பி. ராமகிருஷ்ணராவ், இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு)
  • வாங்கலையா வாங்கலையா (நடிப்பு: வி. துளசி, இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு)
  • காக்கைச் சிறகினிலே (பாடியவர்: வி. நாகையா)
  • சலங்கை குலுங்க வா (பாடியவர்: எம். கல்பகம்)
  • காதலி ராதையை கலங்க விட்டேன் (பாடியவர்: எம். கல்பகம்)
  • வெத்திலைக்காரி (இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு)

மேற்கோள்கள்

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2016-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121153850/http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails12.asp. பார்த்த நாள்: 2016-11-02. 
  2. 2.0 2.1 "ஜெமினியின் 'சக்ரதாரி'". பேசும் படம்: பக். 52-55. திசம்பர் 1948. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சக்ரதாரி&oldid=32697" இருந்து மீள்விக்கப்பட்டது