கொடை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொடை
இயக்கம்ராஜா செல்வம்
தயாரிப்புஎஸ். பாண்டி துரை
கதைராஜா செல்வம்
இசைசுபாஷ் கவி
நடிப்பு
ஒளிப்பதிவுஅர்ஜுனன் கார்த்திக்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
கலையகம்எஸ் எஸ் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 10, 2023 (2023-02-10)
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொடை (Kodai) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜாசெல்வம் இயக்கியுள்ளார். கார்த்திக் சிங்கா மற்றும் அனயா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார், அர்ஜுனன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.சசிகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இது 10 பிப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டது.

கதைக்களம்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் கதாபாத்திரத்தில் கார்த்திக் சிங்கா நடித்துள்ளார். தான் நடத்தும் அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க செய்யும் முயற்சிகளே கொடை படத்தின் மையம் ஆகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

இதற்கு முன்பு மாமதுரை (2007), அய்யன் (2011) ஆகிய படங்களில் நடித்த நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக், கார்த்திக் சிங்கா என்ற புதிய மேடைப் பெயரை கொடை திரைப்படத்திற்குப் பயன்படுத்தினார். [1]

இசை

படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை சுபாஷ் கவி இசையமைத்துள்ளார்.

வரவேற்பு

இத்திரைப்படம் 10 பிப்ரவரி 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தி ஹிந்து தமிழின் ஒரு விமர்சகர், படத்திற்கு ஐந்தில் இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்து, "உற்சாகம் குறைவாக இருந்தது" என்று முடித்திருந்தார். [2] "காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி" ஆகிய எல்லாவற்றின் கலவையும் இந்தப் படத்தில் இருப்பதாக தினத்தந்தியின் ஒரு விமர்சகர் குறிப்பிட்டார். [3] தினபூமியின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தையும் கொடுத்தார். [4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கொடை_(திரைப்படம்)&oldid=32589" இருந்து மீள்விக்கப்பட்டது