கே. பாலமுருகன்
கே. பாலமுருகன் புகைப்படத்திற்கு நன்றி வல்லினம் (பினாங்கு மலேசியா) இளம்தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர். தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களை புதிய உத்திகளிலும், புதிய முறைகளிலும் சொல்லி வரும் நவீன, தீவிர எழுத்தாளர். மலேசியத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். அநங்கம் [1] என்ற சிற்றிதழை நடத்துபவர். தமிழ்மொழிக்கான திறன்மிகு ஆசிரியர்.
வாழ்க்கை
தற்சமயம் மலேசியா கெடா மாநிலத்தின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மலேசியா முழுவதும் சென்று சிறுவர்களுக்கான இலக்கியத்தை வளர்ப்பதில் தன் வாழ்வைச் செலவழித்து வருகிறார்
எழுத்துலகில்
இவர் 2006 ஆம் ஆண்டில், தனது 23ஆவது வயதில் மக்கள் ஓசை பத்திரிகையில் எழுதத் தொடங்கிய 'ஒரு வீடும் சில மனிதர்களும்' எனும் கட்டுரைத் தொடர் மூலம் எழுத்துலக்கு அறிமுகமானவர்.
நூல்கள்
- நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (2009 - நாவல் - பதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)
- கடவுள் அலையும் நகரம் (2009 - கவிதைகள்)
- இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள் (சிறுகதைகள்)
- ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் (நாவல்)
- மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் (சிறுவர் மர்மத் தொடர் நாவல்)
- மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும் (2015 - மர்மத் தொடர் நாவல்)
பரிசுகளும் விருதுகளும்
- கலை கலாச்சார விருது (2012 - சிலாங்கூர் மாநிலத்தின் நாவல் பிரிவில்)[சான்று தேவை]
- கரிகாற்சோழன் விருது - நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (நாவலுக்காக) (2010 - தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்(சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை) கரிகாற்சோழன் விருது)[2][3][சான்று தேவை]
- முதல் பரிசு - 'நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (நாவல்) 2007 - ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில்)[சான்று தேவை]
- மூன்றாவது பரிசு - உறவுகள் நகரும் காலம் (நாவலுக்காக) 2008 - தோட்டத் தொழிலாளர் சங்கமும் நில நிதி கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில்
- முதல் பரிசு - போத்தக்கார அண்ணன் (2007 - மலாயாப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில்
- இரண்டாவது பரிசு - கருப்பாயி மகனின் பெட்டி (சிறுகதை) 2008 - மலாயாப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில்
- ஆறுதல் பரிசு - சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கில கனவுகள் (சிறுகதை) 2009 - மலாயாப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில்
- முதல் பரிசு - நடந்து கொண்டிருக்கிறார்கள் (சிறுகதை) 2007 - மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டியில்
- இரண்டாவது பரிசு - பழைய பட்டணத்தின் மனித குறிப்புகள் (சிறுகதை) 2008 - மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டியில்
- நான்காவது பரிசு: ‘உறங்கிக் கொண்டிருப்பவர்கள் - மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டியில்
மேற்கோள்கள்
- ↑ "மலேசியத் தமிழ் இலக்கியம் புதிய போக்குகள், புதிய பாதைகள் |சு. யுவராஜன் | காலச்சுவடு" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224302/http://www.kalachuvadu.com/issue-148/page26.asp.
- ↑ கரிகாற்சோழன் விருது பெறுகிறார்
- ↑ கரிகாற்சோழன் விருதளிப்பு நிகழ்வில்
வெளி இணைப்புகள்
- கே. பாலமுருகனின் இணையத்தளம்
- நேர்காணல்:கே.பாலமுருகன் (மலேசியா) / சு.தினகரன் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- கே.பாலமுருகன் தலைமையில் மாபெரும் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி விவேகப்பட்டறை
- கே.பாலமுருகனின் புதினத்திற்குக் கரிகாற்சோழன் விருது | வல்லமை மின்னிதழ் | Sunday, December 26, 2010, 12:04