கேப்மாரி
கேப்மாரி | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | சித்தார்த் விபின் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். ஜீவன் |
படத்தொகுப்பு | பிரசன்னா ஜி. கே. |
கலையகம் | கிரீன் சிக்னல் |
வெளியீடு | திசம்பர் 13, 2019 |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கேப்மாரி (Capmaari) என்பது 2019 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். எஸ். ஏ. சந்திரசேகர் எழுதி இயக்கிய இப்படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிதுள்ளனர்.[1] எம். ஜீவன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரசன்னா ஜி. கே படத்தொகுப்பை மேற்கொள்ள, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். படம் 2019 திசம்பர் 13 அன்று வெளியானது.[2]
கதை
ஜெய் ( ஜெய் ) ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணன். ஒரு தொடருந்து பயணத்தின் போது பயிற்சியாளரான ஜெனி ( வைபவி சாண்டில்யா ) என்பவளைச் சந்திக்கிறான். இருவரும் உரையாடத் தொடங்கி, விரைவில் பியர்களையும் படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் தற்செயலாக சென்னையில் சந்தித்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள், மேலும் சில விவரிக்க முடியாத காரணங்களுக்காக, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில், ஜெய்யின் சகாவான வர்ஷா ( அதுல்யா ரவி ) அவன் மீது விருப்பம் கொள்கிறாள். இருப்பினும், அவள் அதை வெளிப்படையாக ஜெய்யிடம் சொல்லவில்லை, என்றாலும் அவள் அதை எல்லா வழிகளிலும் காட்டுகிறாள்.
ஒரு நாள், ஜெய் வேலை முடிந்து வர்ஷாவை அவளது வீட்டில் இறக்கிவிடுகிறான். அவளுடைய வீட்டில், இருவரும் பீர் குடிக்கிறார்கள், போதையேறி உடல் உறவில் ஈடுபடுகின்றனர். ஜெய் நள்ளிரவில் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். இது ஜெனியை கோபப்படுத்துகிறது. வர்ஷாவுடனான உறவு குறித்து ஜெய் மீது சந்தேகம் கொள்கிறாள். ஜெய் அலுவலகத்திலேயே ஜெனி வேலையைப் பெறுகிறாள். ஜெனிக்கும் வர்ஷாவுக்கும் இடையில் சிக்கல் வெடிக்கிறது, அதைத் தொடர்ந்து ஜெய்யை விரைவில் தன்னுடன் கூட்டிக்கொள்வேன் என்று வர்ஷா சவால் விடுகிறாள்.
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி வர்ஷா ஜெய்யின் வீட்டிற்கு வருகிறாள். ஜெனி ஜெய்யை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறாள். இருப்பினும் ஜெய் மீதான அவளது காதல் இந்த முடிவை எடுக்கமுடியாமல் தடுக்கிறது. அவள் அவனை மன்னித்துக் கொண்டே இருக்கிறாள். ஜெய்யை தானும் ஜெனியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வர்ஷா கூறுகிறாள். இறுதியில், ஜெய் கோபமடைந்து, தான் ஜெனியை மட்டுமே நேசிப்பதாகக் கூறி வர்ஷாவை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெய் இரு பெண்களுடனும் அவர்களின் குழந்தைகளுடன் உறவைப் பேணுகிறார் என்று காட்டப்பட்டுள்ளது - ஆனால் இந்த உண்மையை ஜெனியிடமிருந்து மறைத்து வருகிறான். ஜெனி இதை அறிந்ததும், அவள் ஜெயை அடிக்கிறாள் என்ற வேடிக்கையான குறிப்பில் படம் முடிகிறது.
நடிகர்கள்
- ஜெய் ஜெய் வேல் / ஆல்பர்ட் ஜெய்
- அதுல்யா ரவி வர்சாவாக
- வைபவி சாண்டில்யா ஜெனிரியாவாக
- லிவிங்ஸ்டன் ஜெய்யின் தந்தையாக
- ரினு ரவி ஜெய்யின் தாயாக
- சத்யன் ஜி. டி.ஆக
- சீனிவாசன் பவர்பாண்டி துரையாக
- தேவதர்சினி பிரியாவாக
- சித்தார்த் விபின் வெங்கியாக
- கிரேன் மனோகர் மக்கள் கணக்கெடுப்பு அலுவரலாக
- தாடி பாலாஜி மகிழுந்து விற்பனையாளர்
- சர்மிளா தாபா சங்கியாக
- ராகுல் தத்தா குடிப்பகத்தில் உள்ள நபராக
- வெற்றிவேலன் டேவிட்டாக
- எஸ். ஏ. சந்திரசேகர் காவல் ஆய்வாளராக
தயாரிப்பு
இப்படமானது லவ் மேட்டர் என்ற பெயரில் தயாரிக்கத் தொடங்கினர். இருப்பினும், படத்தின் பெயர் பின்னர் கேப்மாரி என்று தெரியவந்தது .[3] மேலும் இது சி.எம் என்றும் அறியப்படுகிறது.[1]
இசை
இப்படத்திற்கான இசையை சித்தார்த் விபின் மேற்கொண்டார்.[4] எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் மும்பையைச் சேர்ந்த 50 நடனக் கலைஞர்களுடன் "என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா" என்ற பாடல் படமாக்கப்பட்டது.[5]
- "உம்முனு இருக்கணும்" - அனிருத் ரவிச்சந்தர்
- "கேப்மாரி கீதம்" - எம். சி விக்கி, சையத் அபு
- "நான் ஒருத்திகிட்ட" - ஹரிச்சரன்
- "இப்பாடி ஓர் இன்பம்" - நேஹா நாயர்
- "எதிர் பார்க்கல" - சஞ்சித் ஹெக்டே
வெளியீடு மற்றும் வரவேற்பு
படத்தின் முன்னோட்டம் நவம்பரில் வெளியிடப்பட்டது.[6] படம் திசம்பர் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் திசம்பர் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.[7][1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Jai's 'Capmaari' release gets postponed!". The Times of India.
- ↑ "S.A Chandrasekhar about Jai's acting in Capmaari". Behindwoods. 2019-11-14. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
- ↑ "Jaí's next film helmed by S. A. Chandrasekaran renamed as 'Capmari'". The Times of India.
- ↑ "Capmaari songs". Gaana. Archived from the original on 2019-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
- ↑ "Jai dances with 50 dancers for Capmaari". The Times of India.
- ↑ "Jai's 'Capmaari' trailer". The Times of India.
- ↑ "Capmaari to hit the screens on December 6". The Times of India.