கவிதா சீனிவாசன்
கவிதா சீனிவாசன் நேபாளத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.[1] அவர் நேபாளி வலத்திரை கேளிக்கை நாடகமான பிஎஸ் ஜிந்தகி (2016) க்காக அறியப்படுகிறார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
கவிதா, பப்புவா நியூ கினியா, ஜாம்பியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வளர்ந்தார்.[3] அவர் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் படித்தார். மாசசூசெட்ஸ் தொழிநுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டமிடலில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அவர் நாடகம் மற்றும் தயாரிப்புகளிலும் பங்கேற்கிறார்.[4][5]
தொழில்
சீனிவாசன் 2009 இல் குர்பான் என்னும் திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.[6] மேலும் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் 2013 இல் காளிசரண் திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். 2014 இல் ஆதியும் அந்தமும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[7][8][9]
கவிதா, 2011 இன் சர்ச் ஆஃப் காட் என்ற ஆவணப்படத்திலும் தோன்றினார். இது இந்தியாவில் உள்ள ஒரு மாய தீவுக்குச் சென்று தனது வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தைக் கண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணியின் உருமாற்றப் பயணத்தை சித்தரிக்கிறது.[10][11][12]
கவிதா தனது நேபாள இணய கேளிக்க நாடகமான பிஎஸ் ஜிந்தகியில் அவர் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மற்றும் படைப்பாளராகவும் உள்ளார்.[13] அவர் ஜூனா அக்தர் வேடத்தில் இந்நாடகத்தில் நடிக்கிறார். அவரது அக்கா கதாபாத்திரமான கோகாப் அக்தரின் வேடத்தில் சுஜாதா கொய்ராலா நடிக்கிறார்.[14][15]
திரைப்படவியல்
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2009 | குர்பான் | சையதா | ஹிந்தி | |
2011 | கடவுளைத் தேடி | கவிதா | ஆங்கிலம் | ஆவணப்படம் |
2013 | காளிசரண் | கலாவதி | தெலுங்கு | |
2014 | ஆதியும் அந்தமும் | ஷாலினி | தமிழ் | |
2016 | பிஎஸ் ஜிந்தகி | ஜூனா அக்தர் | நேபாளி | இணையத் தொடர் |
நாடகங்கள்
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2018 | குமாரி மற்றும் மிருகம் [16] | சுசீலா கலைக்கூடம் |
2022 | என் பெயர் தமிழ் [17] | ஒன் வோர்ல்ட் அரங்கு |
மேற்கோள்கள்
- ↑ name="owt">"Kavita Srinivasan". One World Theatre. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
- ↑ "P.S zindagi, the web series you should be watching right now". neostuffs.com.
- ↑ name="owt">"Kavita Srinivasan". One World Theatre. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01."Kavita Srinivasan" பரணிடப்பட்டது 2022-09-23 at the வந்தவழி இயந்திரம். One World Theatre.
- ↑ "Post-delivery, Kavita Srinivasan busy with designing project". 4 March 2014. https://www.business-standard.com/article/news-ians/post-delivery-kavita-srinivasan-busy-with-designing-project-114030400961_1.html.
- ↑ "Nepal Earthquake: Actress Kavita Srinivasan has a narrow escape". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Nepal-Earthquake-Actress-Kavita-Srinivasan-has-a-narrow-escape/articleshow/47070546.cms.
- ↑ "Never too late". Nepali Times. https://archive.nepalitimes.com/article/from-nepali-press/Never-too-late,3105.
- ↑ "The new girl of Kollywood". https://www.southdreamz.com/54053/the-new-girl-of-kollywood/.
- ↑ "Kavita Srinivasan keen on action". https://zeenews.india.com/entertainment/regional/kavita-srinivasan-keen-on-action_135832.html.
- ↑ "Kavita Srinivasan: No fixed rule for success in showbiz". Business Standard. https://www.business-standard.com/article/news-ians/kavita-srinivasan-no-fixed-rule-for-success-in-showbiz-with-image-113051900444_1.html.
- ↑ Rachel Saltz (22 September 2011). "A Spiritual Quest". The New York Times. https://www.nytimes.com/2011/09/23/movies/in-search-of-god-a-documentary-by-rupam-sarmah.html.
- ↑ Gary Goldstein (23 September 2011). "Movie Review: 'In Search of God'". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/la-xpm-2011-sep-23-la-et-capsules-20110923-story.html.
- ↑ Ronnie Scheib (22 September 2011). "In Search of God". Variety. https://variety.com/2011/film/reviews/in-search-of-god-1117946204/.
- ↑ P.S. Zindagi (Post Seismic Life) - Season 1, filmfreeway
- ↑ "PS Zindagi: For a Better World". kathmandupost.ekantipur.com. http://kathmandupost.ekantipur.com/news/2016-06-19/ps-zindagi-for-a-better-world.html.
- ↑ "PS Zindagi strikes a chord". thehimalayantimes.com. https://thehimalayantimes.com/entertainment/ps-zindagi-wrpn-tv-global-webisode-competition-wgwc/.
- ↑ "Kumari and the Beast". National School of Drama. Archived from the original on 23 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022.
- ↑ "Unsentimental testimony: Kavita performing at Basel Theater Festival". One World Theatre. 31 August 2022.