ஆதியும் அந்தமும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்
இயக்கம்கௌசிக்
தயாரிப்புஇரமணி
கதைகௌசிக்
இசைஎல். வி. கணேசன்
நடிப்பு
  • அஜய்
  • மிட்டாலி அகர்வால்
  • கவிதா சீனிவாசன்
ஒளிப்பதிவுவாசன்
கலையகம்என். கே. கிராப்ட் [1]
வெளியீடுமார்ச்சு, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதியும் அந்தமும் 2014 மார்ச்சில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இதைக் கௌசிக் இயக்கியுள்ளார்[2]. அஜய், மிட்டாலி அகர்வால், கவிதா சீனிவாசன் போன்றோர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

ஊட்டி மருத்துவக் கல்லூரி ஒன்றில் உளவியல் மருத்துவராக சேருகிறார் அஜய் (ஆதி). இவர் தங்கி இருக்கும் அறையில் இரவு 1 மணி ஆனதும் ஒரு பெண்ணின் ஆவி வந்து செல்கிறது. அது யார் என்பதை அறிய ஆதி முற்படுகிறார். அந்த ஆவியை தினமும் பின்தொடர்கிறார். ஆனால், அதில் அவருக்கு விடை கிடைப்பதில்லை.

அதே கல்லூரியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தங்கும் மிட்டாலிக்கும் (சாலினி) அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்து மர்மமாக வரும் பெண் யார் என அறிய முற்படுகிறார்.

ஒருநாள் அந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருக்கும் கல்லறைக்கு சென்று இதற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர். அப்போது அஜய் காணாமல் போய்விடுகிறார். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம்தான் காரணம் எனக்கூறி அடுத்தநாள் காலையில் கல்லூரி முதல்வரிடம் சென்று இதுகுறித்து சண்டை போடுகிறாள் மிட்டாலி (சாலினி). அந்த கல்லூரி முதல்வரோ அஜய் (ஆதி) மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவளிடம் கூறுகிறார். இதைக்கேட்டு அந்த அவள் அதிர்ச்சியடைகிறாள்.

அஜய் (ஆதி) எப்படி மனநிலை பாதிக்கப்பட்டார், அவளுடைய அறைக்கு வந்து செல்லும் அந்த பெண்ணின் ஆவி யாருடையது, அவள் எதற்காக கொலை செய்யப்பட்டாள் என்பதைத் திகிலுடன் மீதிக் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதியும்_அந்தமும்&oldid=30546" இருந்து மீள்விக்கப்பட்டது