கயாதரர்
Jump to navigation
Jump to search
கயாதரர் என்பவர் கயாதர நிகண்டு என்னும் நூலின் ஆசிரியர். இவர் தேவை என்னும் இராமேச்சுரத்தில் வாழ்ந்தவர். அந்தணர். காசியப்ப கோத்திரத்தில் பிறந்தவர்.
இவரால் பாடப்பட்ட வேறு இரண்டு நூல்களைக் கயாதர நிகண்டு குறிப்பிடுகிறது.
- இராமீச்சுரக் கோவை
- தேவை அந்தாதி (தேவை = இராமேசுரம்)
- பொருள் விளக்க அந்தாதியாகிய நிகண்டு நூலைக் கேட்ட மக்கள் தம் வினையிலிருந்து விடுபட இராசீச்சரக் கோவை என்னும் நூலைப் பாடினான்.[1][2]
- இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
இவர் காலம் 15ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑
- மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டிந்த மேதினியோர்
- தாவும் வினை கெடச் சாற்றிய தென்றதமிழ்த் தேவை மன்னும்
- கோவை இராமீச்சுரக் கோவை சொன்ன குருபரன் – கயாதர நிகண்டு 402
- ↑
- அரும்பொருள் அந்தாதி சூடிய அம்பிகையைத்
- தரும்பொருள் செய்த பராபரையான் தினம் தண்டமிழோர்
- விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் – கயாதர நிகண்டு 566