கயாதர நிகண்டு
Jump to navigation
Jump to search
கயாதர நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதர முனிவர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவரால் இயற்றப்பட்டது. கட்டளைக் கலித்துறையால் இயற்றப் பட்ட இந் நிகண்டு 11 பிரிவுகளைக் கொண்டது. இதில் 566 சூத்திரங்களினால் 10,500 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. இது காலத்தால் நான்காவதாக அறியப்படும் நிகண்டு நூல். இதில் புதிய சொற்களோ விளக்கங்களோ இல்லை, ஆனால் நூல் கட்டளைக் கலித்துறையில் இயற்றபட்டுள்ளது.
உசாத் துணை
சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,