ஓடு ராஜா ஓடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓடு ராஜா ஓடு
இயக்கம்நிஷாந்த் ரவிந்தரன்
ஜதின் சங்கர் ராஜ்
தயாரிப்புவிஜய் மூலன்
கதைநிஷாந்த் ரவிந்தரன்
இசைதோஷ் நந்தா
நடிப்புநாசர்
சிம்ரன்
குரு சோமசுந்தரம்
அபிசேக் கேஎஸ்
லட்சுமி பிரியா சந்திரமெளலி
வெங்கடேஷ் ஹரிநாதன்
தீபக் பக்கா
சாருஹாசன்
ஒளிப்பதிவுசுனில் CK
ஜதின் சங்கர் ராஜ்
படத்தொகுப்புநிஷாந்த் ரவிந்தரன்
கலையகம்கேன்டில் லைட் புரொடக்சன்ஸ்
விநியோகம்விஜய் மூலன் டாக்கீஸ்
வெளியீடுஆகத்து 17, 2018 (2018-08-17)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓடு ராஜா ஓடு (Odu Raja Odu) என்பது 2018ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். இது நிஷாந்த் ரவிந்தரன், ஜதின் சங்கர் ராஜ் ஆகிய இருவரின் இயக்கத்தில் வெளியானது.[1][2] நிஷாந்த் ரவிந்தரன் திரைக்கதை எழுதி, படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோருடன் ஆனந்தசாமி, நாசர், சாருஹாசன், பவர் ஸ்டார் சீனிவாசன், வெங்கடேஷ் ஹரிநாதன், சோனா ஹைடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மூத்த நடிகை சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் மீண்டும் நடித்திருந்தார். மேலும் அவரது கணவர் தீபக் பக்கா கதாநாயகனுக்கு எதிரியாக அறிமுகமானார்.[3] இந்த படத்தை விஜய் மூலன் தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் மூலன் டாக்கீஸ் மூலம் தயாரித்து விநியோகித்தார். அறிமுக இசையமைப்பாளர் தோஷ் நந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் 17 ஆகஸ்ட் 2018 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

முன்னதாக விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றிய நிஷாந்த் ரவிந்தரன், ஒளிப்பதிவாளர் ஜத்தின் சங்கர் ராஜ் ஆகிய இருவரின் முதல் இயக்குநர் முயற்சியாக 'ஓடு ராஜா ஓடு' என்று பெயரிடப்பட்டது.[4] இந்த படத்தை விஜய் மூலன் தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் மூலன் டாக்கீஸ் கீழ் தயாரித்தார். மேலும், இராஜேந்திரன் இஎம் மற்றும் வர்கீஸ் மூலன் இணைந்து தயாரித்தனர்.[5] சில மலையாளப் படங்களில் ஒலித் துறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றிய தோஷ் நந்தா இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் அதிகாரப்பூர்வ பட முன்னோட்டம் 5 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிடப்பட்டது.[6]

படத்தின் முதல் விளம்பர சுவரொட்டியை நடிகர் மாதவன் 23 செப்டம்பர் 2016 அன்று வெளியிட்டார்.[7][8]

இசை

படத்தின் அதிகாரப்பூர்வ பாடலான 'பம் ஹா ரம்' 4 மார்ச் 2017 அன்று விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.[9][10]

வெளியீடு

இந்தப் படம் 17 ஆகஸ்ட் 2018 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரியரங்கில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றொரு நகைச்சுவை திரைப்படமான கோலமாவு கோகிலாவுடன் மோதியது.[11] படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[12][13]

சான்றுகள்

  1. "Odu Raja Odu (2018) | Odu Raja Odu Tamil Movie | Odu Raja Odu Review, Cast & Crew, Release Date, Photos, Videos – Filmibeat". FilmiBeat (in English). பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.
  2. Odu Raja Odu Movie Review {3.0/5}: Critic Review of Odu Raja Odu by Times of India, பார்க்கப்பட்ட நாள் 17 August 2018
  3. "கணவருடன் நடித்த சிம்ரன்- ட்ரெய்லர் வெளியீடு (வீடியோ)– News18 Tamil". News18 Tamil. பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.
  4. "Guru Somasundaram talks about Odu Raja Odu". Behindwoods. 2016-10-03. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/guru-somasundaram-talks-about-odu-raja-odu.html. 
  5. "Vijay Moolan Fulfils His Dream With The Film 'Odu Raja Odu'". Desimartini. 2018-08-17. https://m.desimartini.com/news/malayalam/vijay-moolan-fulfils-his-dream-film-odu-raja-odu-article92680.htm. 
  6. "'Odu Raja Odu' trailer - Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/odu-raja-odu-trailer/articleshow/65289729.cms. 
  7. Odu Raja Odu (2016-09-23), Odu Raja Odu | First Look Poster Reveal by Madhavan, பார்க்கப்பட்ட நாள் 17 August 2018
  8. "Chennai365 | Actor Madhavan Reveiled First Look Poster of "Odu Raja Odu" Stills | Chennai365". chennai365.com (in English). பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.
  9. divomovies (2017-03-04), Bum Ha Rum - Odu Raja Odu (Official Promo) Acapella ft. Guru Somasundaram | Nasser | Anandsami, பார்க்கப்பட்ட நாள் 2018-08-21
  10. "Vijay Sethupathi". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
  11. "Weekend Watch: Kolamaavu Kokila, Odu Raja Odu, Annanukku Jey Are The Tamil Releases This Week". Silverscreen.in. 2018-08-16. https://silverscreen.in/india/features/weekend-watch-kolamaavu-kokila-odu-raja-odu-annanukku-jey-are-the-tamil-releases-this-week/. 
  12. [1]
  13. [2]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஓடு_ராஜா_ஓடு&oldid=31624" இருந்து மீள்விக்கப்பட்டது