ஒங்கள போடணும் சார்
ஒங்கள போடணும் சார் | |
---|---|
இயக்கம் | சிறீஜித் விஜயன் |
தயாரிப்பு | ரமேஷ் பெரிந்தல்மனை |
கதை | சிவா அஞ்சால், சாஜித் S. ஈசாக் |
இசை | ரெஜிமோன் |
நடிப்பு | ஜித்தன் ரமேஷ் சனுஜா சோம்நாத் ஜோனிகா தோடா அனு நாயர் பாரிஜாதா சின்கா வைசாலி |
ஒளிப்பதிவு | எஸ். செல்வகுமார் |
படத்தொகுப்பு | விஷ்ணு நாரயணன் |
கலையகம் | ஷேடோபாக்ஸ் புரொடக்ஷன்ஸ் , சிக்மா பிலிம்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 13, 2019 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒங்கள போடணும் சார் (Ongala Podanum Sir) ஆர். எல். ரவி மற்றும் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான பாலியல் திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதில் ஐந்து அறிமுக நடிகைகளுடன் முக்கிய வேடத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார்.[1] [2] ரெஜிமோன் இசையப்பில் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் 13 செப்டம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[3] [4]
தயாரிப்பு
பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான இது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தயாரிப்பைத் தொடங்கியது. சனவரி 2019 க்குள் முடிக்கப்பட்டது. நானும் ரௌடி தான் (2015) படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் பேசும் பிரபலமான உரையாடலைப் பெயரிட இயக்குனர்கள் ரவியும் ஸ்ரீஜித்தும் தேர்வு செய்தனர்.[5] [6] [7] தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் ஐந்து புதிய நடிகைகளை ஜித்தன் ரமேஷுடன் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ரமேஷ் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். [8] [9]
ஒலிப்பதிவு
படத்திற்கு ரெஜிமோன் இசையமைத்திருந்தார்.
வெளியீடு
இந்த படம் 13 செப்டம்பர் 2019 அன்று தமிழகம் முழுவதும் குறைவான திரையரங்குகளில் வெளியானது. [10] இந்தியன் எக்சுபிரசு அதன் விமர்சனத்தில் எதிர்மறை விமர்சனத்தை அளித்தது. மேலும் "கொடூரமான மோசமான" படம் என்று எழுதியது. [11]
சான்றுகள்
- ↑ "பணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்". Maalaimalar. 13 September 2019.
- ↑ "ஒங்கள போடணும் சார்". maalaimalar.com. 9 August 2019.
- ↑ "Jithan Ramesh's Adult Horror Comedy Titled 'Ongala Podanum Sir'". 23 January 2019.
- ↑ "'Ungala Podanum Sir'". Sify. Archived from the original on 2019-01-23. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
- ↑ "Jithan Ramesh returns with an adult comedy". The New Indian Express.
- ↑ Subramanian, Anupama (22 January 2019). "Nayanthara's popular dialogue now a film title". Deccan Chronicle.
- ↑ "நயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்". Maalaimalar. 21 January 2019.
- ↑ "Jithan Ramesh's adult comedy has five heroines - Times of India". The Times of India.
- ↑ "ஒங்கள போடணும் சார் - பட போஸ்டரை வெளியிட்ட ஜீவா!". Samayam Tamil.
- ↑ "Friday Fury: September 13". Sify. Archived from the original on 2019-09-13. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
- ↑ "'Ongala Podanum Sir' review: Jithan Ramesh's comeback film a god-awful vulgarfest". The New Indian Express.