ஏழாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏழாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் தெல்லிப்பழை, கட்டுவன், குப்பிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களும், தெற்கில் சுன்னாகம், ஊரெழு ஆகிய ஊர்களும், மேற்கில் மல்லாகமும், உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்றான இவ்வூர் ஏழாலை வடக்கு, ஏழாலை மேற்கு, ஏழாலை கிழக்கு, ஏழாலை தெற்கு, ஏழாலை மத்தி, ஏழாலை தெற்மேற்கு என ஆறு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள்

ஏழாலையில் ஏழு ஆலயங்கள் இருந்ததனால் ஏழாலை எனப் பெயர் ஏற்பட்டதாக மக்கள் கருதுகின்றனர்.[1][2] இவ் ஏழு ஆலயங்களைப் பற்றிய விபரங்களைப் பின்வருமாறு காணலாம்:

  • ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலயம்
  • ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயம்
  • ஏழாலை புங்கடி அம்பலவாணேஸ்வரர் ஆலயம்
  • ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்மன் ஆலயம் (இது முன்னர் "அத்தியடி புவனேஸ்வரி அம்மன் ஆலயம்" என்று அழைக்கப்பட்டிருந்தது[3][4][5])
  • ஏழாலை பெரியதம்பிரான் கோவில் (ஏழாலை மத்தி)

ஆனால் இவ்வாலயங்களைத் தவிர ஏனைய சிறு ஆலயங்களும் மற்றும் கத்தோலிக்க ஆலயங்களும் இவ்வூரில் உள்ளன.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=ஏழாலை&oldid=39888" இருந்து மீள்விக்கப்பட்டது