ஊரெழு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஊரெழு
ஊரெழு is located in Northern Province
ஊரெழு
ஊரெழு
ஆள்கூறுகள்: Coordinates: 9°44′N 80°03′E / 9.733°N 80.050°E / 9.733; 80.050
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச சபைவலிகாமம் கிழக்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

ஊரெழு (Urelu) இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஒரு ஊராகும். இது, யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் , உரும்பிராய்க்கு அடுத்து அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், சுன்னாகம், அச்செழு ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

பல பெருமைகளை அணிகளாகக் கொண்ட இவ்வூரானது தனைச்சூழ ஏழு ஊர்களை அரண்களாகக் கொண்டு ஊரெழு எனப்பெயர் பெற்றுள்ளது. ஊர் ஏழு மருவி ஊரெழுவானது என்பர். கிழக்கில் நீர்வேலியும் தென்பகுதியில் உரும்பிராயும், மருதனார்மடமும் மேற்கோரமாகச் சுன்னாகம், வடக்கே ஏழாலை, புன்னாலைக்கட்டுவன் வட கிழக்கில் அச்செழுவும் ஊரெழுவுடன் உறவாடி நிற்கின்றன.

செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஒரு இடமாகும். இது வலிகாமம் கிழக்கு  கோப்பாய் பிரதேச சபை பிரிவிலும் யாழ்ப்பாணம் யா/267 கிராம சேவையாளர் பிரிவிலும் உள்ளடங்கும் ஒரு கிராமம்  ஆகும். ஊரெழு வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது . யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் ஒன்று. யாழ்ப்பாணத்துக்கு புதிய பயிர்களான, திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 1970 களிலும் 1980 களிலும் வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தவருமான திலீபன் இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"Achchezhu, Oorezhu, Ezhuthu-madduvaa’l". TamilNet. October 12, 2012. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35652. 

"https://tamilar.wiki/index.php?title=ஊரெழு&oldid=39886" இருந்து மீள்விக்கப்பட்டது