எஸ். பி. மயில்வாகனம்
இயற்பெயர் | எஸ். பி. மயில்வாகனம் |
---|---|
பிறப்பு | சி. பொ. மயில்வாகனன் |
இறப்பு | 1983 |
பணி | ஒலிபரப்பாளர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | வானொலி அறிவிப்பாளர் |
துணைவர் | செந்திமணி மயில்வாகனம் |
பிள்ளைகள் | இரமணன், சசிதரன், யசோதா |
சி. பொ. மயில்வாகனம் (S. P. Mayilvahanam, இறப்பு: 1983) இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் முன்னோடி என்று கருதப்படுபவர். உலக ரீதியாக பலராலும் அறியப்பட்ட தமிழ் வானொலி அறிவிப்பாளர். தென்னிந்தியாவில் பொதுமக்கள் மத்தியிலும், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கியவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
கொழும்பு செக்கடித் தெருவில் இரண்டு தலைமுறைகளாக புகையிலை, எண்ணெய் வணிகம் செய்துவந்த ஒரு குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் மயில்வாகனன்.[2] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர்.[2] அன்று இலங்கை வானொலியில் பிரபலமான அறிவிப்பாளராக இருந்த செந்திமணி உடனான் திருமணம் இவரை குடும்ப வர்த்தக நிலையத்தில் இருந்து வெளியேற்றி, வானொலி ஊடகத்துறையில் நுழைய வைத்தது.[2]
வானொலி அறிவிப்பாளராக
மயில்வாகனம் இலங்கை வானொலியில் 1954 ஆம் ஆண்டில் இணைந்தார். இவர் வர்த்தக ஒலிபரப்பில் சேருவதற்கு முன்னர் கந்தையா என்பவர் அப்பணியைச் செய்து வந்தார். அப்போது வர்த்தக ஒலிபரப்பின் நேரம் நாள் ஒன்றுக்கு அரை மணித்தியாலம் மட்டுமே. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளிபோர்ட் டொட் என்பவர் கொழும்புத் திட்டம் மூலம் இலங்கை வானொலியில் பணியாற்றிய போது அவரிடம் பயிற்சி பெற்றார் மயில்வாகனம். இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்.
தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது தயாரிப்பாளர்கள் அழைப்பின் பேரில் காலை கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து பாட்டுகளைப் பெற்றுக்கொண்டு மாலை மீண்டும் கொழும்பு திரும்புவார்.[3]
சிறப்புத் தகவல்கள்
- நான் கண்ட சொர்க்கம் (1958) திரைப்படத்தில் சுவர்க்கக் காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலு ஏ, ரேடியோ சிலோன் மயில்வாகனம் இங்கேயும் வந்து விட்டாரா!, என்று குறிப்பிடுவார்..
மேற்கோள்கள்
- ↑ "When Ceylon ruled the airwaves". Archived from the original on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2008-09-04.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 கா. சிவத்தம்பி. "சி. பொ. மயில்வாகனன் பற்றிய ஒரு நினைவஞ்சலிக் குறிப்பு". தமிழ் ஒலி. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF_1984.01-03. பார்த்த நாள்: 2020-05-10.
- ↑ கலைமகள்; நவம்பர் 2014; ’இலங்கை வானொலி’ கட்டுரை ; பக்கம் 37-42
உசாத்துணை
- Wavell, Stuart. - The Art of Radio - Training Manual written by the Director Training of the CBC. - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 1969.
வெளி இணைப்புகள்
- Sri Lanka Broadcasting Corporation
- Reflections from one of S. P. Mylvaganam's contemporaries பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- SLBC-creating new waves of history பரணிடப்பட்டது 2006-03-21 at the வந்தவழி இயந்திரம்
- Eighty Years of Broadcasting in Sri Lanka பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம்
- இலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு