எஸ். பி. காந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். பி. காந்தன்
S B Khanthan.JPG
பிறப்புசென்னை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஇயக்குநர், மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படங்கள்

எஸ். பி. காந்தன் (S.B. Khanthan), தமிழ் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1][2]

தொழில்

ஹரிகதா கலாட்சேபம் புகழ் டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரியின் மகனான எஸ். பி. காந்தன் பட்டயக் கணக்கர் தொழில் செய்து கொண்டிருந்த போது, மேடை நாடக நடிகரும் மற்றும் திரைப்பட நடிகருமான, தனது சகோதரர் மௌலியின் தாக்கத்தால், காந்தன், நகைச்சுவை மேடை நாடகங்களை இயக்கினார்.[3] பின்னர் பட்டயக் கணக்கர் வேலையை விட்டுவிட்டு, கிரேசி மோகன் எழுத்தில், கிரேசி மோகன், மாது பாலாஜி, ஆர். நீலகண்டன் மற்றும் சீனு மோகன் ஆகியோர் நடிப்பில் முழு நகைச்சுவை மேடை நாடகங்களின் இயக்கப் பணியை மேற்கொண்டார். மேலும் தொலைக்காட்சித் தொடர் இயக்குநராகவும் மற்றும் ஆவணப்பட இயக்குநராகவும் செயல்படுகிறார்.

காந்தனின் தொலைக்காட்சித் தொடர்கள்

கிரேசி மோகன் எழுதிய கீழ்கண்ட தொலைக்காட்சி நாடகங்களை எஸ். பி. காந்தன் இயக்கியுள்ளார்.

  • கிரேசி மோகன் எழுதிய ஹியர் ஈஸ் க்ரேசி [4] (1986-1987)
  • மாது-சீனு [5]
  • நில் கவனி கிரேசி
  • சி-ரி-க-ம-ப-த-நி
  • ஒரு பேயின் டைரி
  • பத்துக்கு பத்து
  • கிரேசி டைம்ஸ்
  • விடாது சிரிப்பு
  • சிரி சிரி கிரேசி
  • அலாவுதினும் 100 வாட்ஸ் பல்பும்
  • கிரேசி கிஷ்கிந்தா
  • மாது மிரண்டால்
  • அன்புள்ள மாதுவிற்கு
  • மீசை ஆனாலும் மனைவி
  • சாடிலைட் சாமியார்
  • ஜுராசிக் பேபி
  • சாக்லேட் கிருஷ்ணா

வெளியிட்ட குறுந்தகடுகள்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் காண்பதற்கு வேண்டி, கிரேசி மோகன் எழுதிய நாடகங்களை எஸ். பி. காந்தன் குறுந்தகடுகளில் பதிந்து வெளியிட்டுள்ளார்.

  • கணபதிக்கு கல்யாணம் - DD1
  • கணேசனுக்கு கால்கட்டு - DD1
  • சிரிப்புத் திரை - சன் டி. வி.
  • கம்ப்யூட்டர் காதல் - ராஜ் டி. வி
  • மாது பிளஸ் 2 [6]
  • மேரேஜ் மேடு இன் சலூன் [7]
  • பௌர்ணமி - கே. பாலசந்தர் இயக்கியது.
  • ஒரு கூடை பாசம் - கே. பாலசந்தர் இயக்கியது.

பிற தகவல்கள்

தனது சகோதரர் மௌலி எழுதிய நான் ரெடி நீ ரெடியா எனும் மேடை நாடகத்தை எஸ். பி. காந்தன் இயக்கி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 40 வாரத் தொடர்களாக வெளியானது. காந்தன் இயக்கிய சாருலதா எனும் தொடர் 40 வாரங்களாக சன் தொலைக்காட்சியில் வெளியானது. மேலும் எஸ். பி. காந்தன் விளம்பரப் படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.

2006-இல் நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுடன் கூடிய ஜெர்ரி எனும் திரைப்படத்தை காந்தன் இயக்கியுள்ளார்.[8]

மேற்கோள்கள்

  1. The journey of multifaceted Khanthan
  2. KRISHNAMACHARI, SUGANTHY (21 January 2010). "The GNB charisma". தி இந்து. http://www.thehindu.com/arts/music/article84390.ece. பார்த்த நாள்: 29 July 2011. 
  3. "கிரேஸி மோகனுக்கு... முன்னாடியே தெரிஞ்சிருச்சு - இயக்குநர் எஸ்.பி.காந்தன் கண்ணீர்", Hindu Tamil Thisai, 2019-06-18, பார்க்கப்பட்ட நாள் 2024-05-13
  4. Here's Crazy
  5. Madhu - Cheenu
  6. Maadhu +2
  7. marriage made in saloon
  8. Jerry (film)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._பி._காந்தன்&oldid=20837" இருந்து மீள்விக்கப்பட்டது