எஸ். கே. பொட்டெக்கட்
எஸ்.கே.பொட்டெக்கட் (ஆங்கிலம்: S. K. Pottekkatt) என்று பிரபலமாக அழைக்கப்படும் சங்கரன் குட்டி பொட்டெக்கட் (14 மார்ச் 1913 - 6 ஆகஸ்ட் 1982), மலையாள இலக்கியத்தின் இந்திய எழுத்தாளரும், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் பத்து புதினங்கள், இருபத்தி நான்கு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைகள், பதினெட்டு பயணக் குறிப்புகள், நான்கு நாடகங்கள், கட்டுரைகளின் தொகுப்பு மற்றும் தனிப்பட்ட நினைவூட்டல்களை அடிப்படையாகக் கொண்ட ஓரிரு புத்தகங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட அறுபது புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் புதினத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் ஞானபீட விருது ஆகியவற்றைப் பெற்றவர் . இவரது படைப்புகள் அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் தவிர ஆங்கிலம், இத்தாலியன், உருசியன், ஜெர்மன் மற்றும் செக் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சுயசரிதை
எஸ்.கே.பொட்டெக்கட் மார்ச் 14, 1913 அன்று கோழிக்கோட்டில் (காலிகட்) குஞ்சிராமன் பொட்டெக்காட் என்ற ஒரு ஆங்கில பள்ளி ஆசிரியருக்கும் அவரது மனைவி கிட்டுலிக்கும் பிறந்தார். [1] கணபதி உயர்நிலைப் பள்ளியில் ஆரம்ப பள்ளிப்படிப்புக்குப் பிறகு, அவர் 1929 இல் கோழிகோட்டில் உள்ள சாமோரின் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மெட்ரிக் படித்து, 1934 இல் கோழிகோட்டின் சாமோரின் குருவாயுரப்பன் கல்லூரியில் இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் படித்த பின்னர் மூன்று ஆண்டுகளாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்த காலத்தை அவர் இந்திய பாரம்பரிய இலக்கியங்கள் மற்றும் மேற்கத்திய இலக்கியங்கள் ஆகியவற்றைப் படிப்பதற்குப் பயன்படுத்தினார். 1937 ஆம் ஆண்டில், அவர் கோழிக்கோடு குஜராத்தி பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். [2]
அவர் இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மற்றும் 1939 ஆம் ஆண்டின் திரிபுரி அமர்வில் கலந்து கொண்டார். அதற்காக பள்ளி அதிகாரிகள் அவரை செல்ல அனுமதிக்காததால் அவர் பணியை ராஜினாமா செய்தார். பின்னர், அவர் பம்பாய் மற்றும் லக்னோவுக்குச் சென்றார். அங்கு அவர் 1945 வரை தங்கி பல வேலைகளைச் செய்தார். 1945 இல் கேரளா திரும்பிய பின்னர், இந்தியாவின் பல பகுதிகளுக்குச் பயணம் செய்தார். 1949 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். 1952 ஆம் ஆண்டில், இலங்கை, மலாயா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல அவர் மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்றார்.
பொட்டெக்கட் 1950 ல் ஜெயவல்லி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். அவரது மனைவி 1980 இல் இறந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 1982 இல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. மேலும், 1982 ஆகஸ்ட் 6 அன்று காலிகட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார். [3]
இலக்கிய வாழ்க்கை மற்றும் பயணங்கள்
1928 ஆம் ஆண்டில் ஜாமோரின் குருவாயுரப்பன் கல்லூரியின் கல்லூரி இதழில் பொட்டெக்கட் தனது முதல் கதையான ராஜநீதியை வெளியிட்டார். "வைதுதா சக்தி" என்ற கதை 1934 பிப்ரவரி மாத மத்ருபூமி இல்லஸ்ட்ரேட்டட் வார இதழில் வந்தது. அவர் தனது முதல் புதினமான நாடன்பபிரேமம், என்பதை கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு சிறிய குக்கிராமமான முக்கத்தில் நடப்பதாக ஒரு காதல் கதையை எழுதினார். [4] 1939 ஆம் ஆண்டில் அவர் பம்பாயில் இருந்தபோது எழுதிய இப்புதினம் 1941 இன் இறுதியில்வெளியிடப்பட்டது. [2] [5] அவரது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கப்பிரிகலுடே நாட்டில் (நீக்ரோக்களின் தேசத்தில்) மற்றும் இன்னாதே ஐரோப்பா (தி ஐரோப்பா டுடே) ஆகிய இரண்டு பயணக் குறிப்புகள் அடுத்த இரண்டு வெளியீடுகளாகும். அவர் 1960 இல் ஓரு தெருவின்தே கதாவையும் 1971 ஆம் ஆண்டில் அவரது மகத்தான படைப்பான ஓரு தேசந்தினே கதாவையும் வெளியிட்டார்.
அரசியல் வாழ்க்கை
இந்திய பொதுவுடமை கட்சியின் பதாகையின் கீழ் தலச்சேரியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கானதேர்தலில் பொட்டெக்கட் இரண்டு முறை போட்டியிட்டார்.. [6] 1957 ஆம் ஆண்டில் 2 வது மக்களவைத் தேர்தலில் எம். கே. ஜினச்சந்திரனிடம் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார், அடுத்தது 1962 இல் 3 வதுமக்களவைத் தேஎர்தலில் சுகுமார் அழீகோடை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவர் 1967 வரை தனது பதவிக்காலத்தை நிறைவேற்றினார். [1]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Biography on Kerala Sahitya Akademi portal". 2019-02-28 இம் மூலத்தில் இருந்து 2019-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301013358/http://www.keralasahityaakademi.org/sp/Writers/PROFILES/SKPottakkat/Html/SKPottekkatgraphy.htm.
- ↑ 2.0 2.1 "S K Pottekkatt - Centenary of a World Traveler". 2019-03-01. https://specials.manoramaonline.com/Literature/2014/SK-Pottakkattu/Centenary-Special.html.
- ↑ "സഞ്ചാരിയായ എഴുത്തുകാരന്!" பரணிடப்பட்டது 2019-03-06 at the வந்தவழி இயந்திரம். Mathrubhumi. Retrieved 4 March 2019.
- ↑ "Telling the tale of Mukkom" (in en-IN). 2007-12-30. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Telling-the-tale-of-Mukkom/article14904348.ece.
- ↑ "Mukkom's tribute to a litterateur". https://www.thehindu.com/2005/09/20/stories/2005092002050200.htm.
- ↑ Thomas Welbourne Clark (1970). The Novel in India: Its Birth and Development. University of California Press. பக். 218–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-01725-2. https://books.google.com/books?id=esji8DgSMbQC&pg=PA218.
மேலும் படிக்க
- Edited By Rajendra Awasthy (2004). "Nishaganthi (short story by S, K. Pottekkatt (full text)". Selected Malayalam Short Stories. Diamond Pocket Books (P) Ltd.. பக். 53–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-288-0479-3. https://books.google.com/books?id=bFRUn0IyhMQC&pg=PA53.
- "നൂറ് തികഞ്ഞ യാത്ര". 2013-06-04 இம் மூலத்தில் இருந்து 2013-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130604084656/http://www.mathrubhumi.com/books/article/memories/2295/. "Excerpts from Pottekkatt Diaries"
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எஸ். கே. பொட்டெக்கட்
- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". 2019-03-01 இம் மூலத்தில் இருந்து 2017-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170816192315/http://www.keralasahityaakademi.org/sp/Writers/PROFILES/SKPottakkat/Html/SKPottakkatPage.htm.
- Interview with Pottekkatt பரணிடப்பட்டது 2015-08-23 at the வந்தவழி இயந்திரம் from Mathrubhumi
- Ambikasuthan Mangad. Review of the famous story "Pulliman". Madhyamam Weekly.