எல். ஆதிரா கிருட்டிணா
ஆதிரா கிருட்டிணா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | வயலின் ஆதிரா / அதிரா / எல். ஆதிரா கிருட்டிஷ்ணா / எல். ஆதிரா |
பிறப்பிடம் | கருநாடக இசை, இந்திய பாரம்பரிய இசை, வயலின், உலக இசை, ஜாஸ், பியூசன் இசை |
தொழில்(கள்) | வயலின் கலைஞர், பாடகர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | வயலின், வியோலம் |
இணையதளம் | athira.in |
ஆதிரா கிருட்டிணா (Athira Krishna) இவர் ஓர் இந்திய வயலின் கலைஞராவார். தனது 32 மணிநேர இடைவிடாத கர்நாடக வயலின் தனி இசை நிகழ்ச்சிக்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் இளைய கலாச்சார தூதர்களில் இவரும் ஒருவராவார்.[1]
ஆரம்ப ஆண்டுகளில்
இவர் கேரளாவில் ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர்களில் ஒருவரான வித்வான் சிறீ கோபால பிள்ளை, கருநாடக இசையின் புகழ்பெற்ற தஞ்சை பாரம்பரியத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஆவார்.
கிருட்டிணா கே. சி. கிருட்டிண பிள்ளை மற்றும் எஸ். லீலா குறுப் ஆகியோரின் மகளாவார். இவர் சங்கீத வித்வானான தனது தாத்தாவின் கீழ் தீவிர பயிற்சி பெற்றார். இவர் ஒரு குறுநடை போடும் குழந்தையாக இருந்தபோதே இசை திறமையைக் காட்டினார். இவர் தனது தந்தை பாடுவதைக் கேட்டு அந்த இசை சொற்றொடர்களை மீண்டும் கூறுவார்.
தொழில்
கிருட்டிணா தனது எட்டாவது வயதில் வாய்ப்பாட்டில் இருந்து வயலினுக்கு மாறினார். அதிசயிக்கத்தக்க ஒரு குழந்தை மேதையாக அதில் பாராட்டும் அளவில் திறமையை வளர்த்துக் கொண்டார். இவர் 9 வயதிலிருந்தே வயலின் வாசிக்கத் தொடங்கினார். "இந்திய வயலின் இளவரசி" என்று பிரபலமாகப் பாராட்டப்பட்ட இவர், இந்தியாவின் முதல் பெண்மணி உஷா நாராயணனால் "இந்தியாவின் இசை மாணிக்கம்" என்று கௌரவிக்கப்பட்டார். மேலும் பல சர்வதேச இசை விழாக்களில் இந்திய பாரம்பரிய இசையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான குடியரசுத்தைவர் மாளிகையில் (இராஷ்டிரபதி பவன்) நிகழ்ச்சிக்கு கிருட்டிணா இரண்டு முறை அழைக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில், இந்திய பாரம்பரிய இசையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தை மேதையாக, புது தில்லியில் நடைபெற்ற மதிப்புமிக்க சர்வதேச சிறுவர் பேரவையில் "தென்னிந்திய பாரம்பரிய இசையில் வயலின்" பற்றிய ஒரு நிகழ்ச்சியை வழங்கினார். 2002 ஆம் ஆண்டில், கசக்கஸ்தானில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்காக 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் இசை வகைகளை உள்ளடக்கிய 'உலக இசை இரவு' என்ற ஒரு தனித்துவமான கருப்பொருளில் நிகழ்ச்சியை வழங்கினார்.
மரியாதைகள்
2003 ஆம் ஆண்டில், கிருட்டிணா உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தனது 32 மணி நேர இடைவிடாத தென்னிந்திய பாரம்பரிய வயலின் இசை நிகழ்ச்சிக்காக கின்னஸ் புத்தகத்தில் நுழைந்தார். 'நாதபிரம்மா' என்று பெயரிடப்பட்ட இது இவரது புகழ்பெற்ற தாத்தாவுக்கும் அஞ்சலி செலுத்தியது. அதே சாதனையை இவர் லிம்கா சாதனைகள் புத்தகத்திலும் வைத்திருக்கிறார். "பாரம்பரிய இந்திய இசையில் வயலின்" என்ற தலைப்பில் உருசியாவில் நடந்த இசை விழாவின் விரிவுரை பிரிவில் பேசிய பேச்சாளர்களில் இளையவர் ஆவார். 2005 ஆம் ஆண்டில், சர்வதேச இசை விழாவான ஜாஸ் மீட்ஸ் கிளாசிக் என்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெர்மனியின் மெண்டன் நகரத் தந்தியால் அழைக்கப்பட்டார். ஜெர்மனியின் கைசர்வெர்த்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் நிகழ்த்திய முதல் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார்.
2005 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 74 வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சியை வழங்க கிருட்டிணா அழைக்கப்பட்டார். வயலின் கலைஞர் எல்.ஆதிரா கிருட்டிணா ‘இன்போசிஸ்-கல்வி உலக இளம் சாதனையாளர் விருது -2007’ வென்றுள்ளார். [2]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- Athira Krishna's Official Website www.athira.in
- Concert Review- THE HINDU பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்
- Concert Review – GOA PLUS
- Bharat Kalachar Announces Awardees -The Hindu பரணிடப்பட்டது 2009-09-14 at the வந்தவழி இயந்திரம்
- TED INSPIRING SPEAKERS
- VERVE MAGAZINE YOUNG ACHIEVER LIST
- The Hindu News -Infosys-Education World Young Achiever Award – Article at Hindu.com பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu News -Chennai violin prodigy wins rave reviews in Germany – Article at Hindu.com பரணிடப்பட்டது 2007-11-03 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu News – An employee's ward does BSNL proud -Athira stunned the BSNL family – Article at Hindu.com பரணிடப்பட்டது 2004-11-29 at the வந்தவழி இயந்திரம்