என்னு நின்டே மொய்தீன்
என்னு நின்டே மொய்தீன் | |
---|---|
இயக்கம் | ஆர்.எஸ். விமல் எழுதி இயக்கியது, இது காஞ்சநாமலா மற்றும் பிபி மொய்தீன் ஆகியோரின் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது. 1960 களில் கோழிக்கோடு முக்கத்தில் . |
தயாரிப்பு | சுரேஷ் ராஜ் பினய் சங்கரத் இரகி தாமசு |
கதை | ஆர். எஸ். விமல் |
கதைசொல்லி | சுதீர் கரமனா |
இசை | பாடல்கள்: எம். ஜெயசந்திரன்<brஇரமேஷ் நாராயணன் கோபி சுந்தர் பின்னணி இசை: கோபி சுந்தர் |
நடிப்பு | பிரித்விராஜ் சுகுமாரன் பார்வதி மேனன் |
ஒளிப்பதிவு | ஜமோன் டி. ஜான் |
படத்தொகுப்பு | மகேசு நாராயணன் |
கலையகம் | நியூட்டன் மூவிஸ் |
விநியோகம் | சென்ட்ரல் பிக்சர்ஸ் |
வெளியீடு | 19 செப்டம்பர் 2015 |
ஓட்டம் | 168 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹12 கோடி[1] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹60 கோடி[2] |
என்னு நின்டே மொய்தீன் (Ennu Ninte Moideen) மலையாள மொழியில் வெளியான வாழ்க்கை வரலாற்று காதல் திரைப்படமாகும்.[3] 1960-70களில், கேரளத்தில் உள்ள முக்கம் எனும் ஊரில், இந்து சமயத்தின் உயர்குடியில் பிறந்த காஞ்சனமாலை, புகழ்பெற்ற இசுலாமிய குடும்பத்தைச் சார்ந்த மொய்தீன் எனும் இருவருக்கும் இடையே மூண்ட காதல் கதையை இயக்குநர் ஆர்.எஸ். விமல் எழுதி இயக்கியிருந்தார்.[4][5] இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், பார்வதி மேனன் ஆகியோர் மொய்தீன் மற்றும் காஞ்சனமாலா என்ற தலைப்பு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் டோவினோ தாமசு, பாலா, சாய்குமார், சசிகுமார், லீனா ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர்.[6][7]
படத்திற்கு எம். ஜெயசந்திரன், இரமேஷ் நாராயண் ஆகிய இருவரும் இசையமைத்தனர்.[8] பின்னணி இசையை கோபி சுந்தர் அமைத்தார். ஒளிப்பதிவு ஜோமன் டி. ஜான் மேற்கொண்டார்.[9] படம் வெளியானதும், ஒரு நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும், வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாகும். இது திரையரங்கில் ₹ 50 கோடிக்கு மேல் வசூலித்தது.[10][11]
கதைப்போக்கு
மொய்தீன் ஒரு சமூக அரசியல் ஈடுபாட்டாளராகவும், காஞ்சனமாலை மருத்துவம் பயிலும் துணிவு நிறைந்த மாணவியாகவும் இருக்கின்றனர். இவர்களுக்குள் அஞ்சல்கள் வழியே காதல் மலர, இருவரும் அவர்களுக்கென அஞ்சல் மொழியையும் வளர்த்துக்கொண்டனர்.
ஒருபுறம், காஞ்சனமாலையின் காதல் பழங்கால கட்டுப்பாட்டு குணங்கள் மிகுந்த அவளது உறவினர்களுக்கு அறியவரும்போது, அவளை தாக்குகினர். மறுபுறம், மொய்தீனின் தந்தை அவனது காதலை ஏற்க மறுத்து, கத்தியால் குத்திவிட்டு, காவலர்களிடம் ஒப்புக்கொண்டு சிறைச்செல்கிறார். எப்பாடோ, மொய்தீன் உயிர் பிழைத்துக் கொள்கிறான்.
நீயதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போது, மொய்தீன், நடந்தது அனைத்தும் விபத்து மட்டுமே, தனது தந்தைக்கும் இதற்கும் ஏது தொடர்புமில்லை எனக்கூறி தந்தையை காப்பாற்றுகிறான். மகனது இம்மனம் நெருடும் செயல், தந்தையின் மென்குணத்தை வெளிகொண்டுவருகிறது. எனினும், அவனது தந்தை மறுநாளே, தனது உயிரை துறக்கிறார்.
கடைசியில், மொய்தீனும் காஞ்சனமாலையும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்கின்றனர். கடவுசீட்டுகளை பெற்றுக்கொண்டு திரும்ப வரும்போது, அவன் பயணம் செய்த படகு நீர்ச்சுழியில் மாட்டிக்கொண்டு கவிழ்த்துவிட, மற்ற உயிர்களை காத்து கடைசியில் தனது உயிரை துறக்கிறான் மொய்தீன். இதனை அறிந்த காஞ்சனமாலை தன்னுயிர் மாய்த்துக்கொள்ள முயலும்போது, மொய்தீனின் தாயாரால் காப்பாற்றப்பட்டு, அவளை தனது வீட்டிற்கே கூட்டிச்செல்கிறார். காஞ்சனமாலை அங்கே ஒரு கைம்பெண்ணாக இருந்துவருகிறார்.
கதாபாத்திரங்கள்
- மொய்தீனாக பிரித்விராஜ் சுகுமாரன்
- காஞ்சனமாலையாக பார்வதி மேனன்
- பெரும்பரம்பில் அப்புவாகடோவினோ தாமசு
- மொய்தீனின் தந்தையாக சாய்குமார்
- காஞ்சனமாலியின் தந்தையாக சசிகுமார்
- காஞ்சனாவின் சகோதரனாக பாலா
- மொய்டீனின் தாயாராக லீனா
- சுதீர் கரமனா
- சுதீஷ்
- சிவாஜி குருவாயூர்
- கலாரஞ்சினி
உருவாக்கம்
இக்கதை இருவஞ்சிப்புழை ஆறு மற்றும் முக்கம் சிற்றூரை கதைக்களமாக கொண்டுள்ளது. இயக்குனர் விமல், முதலில் கோப்பு படமாக உருவாக்க எண்ணி, ஈற்றில் முழுநீள திரைப்படமாக உருவாக்கினார். 2014யில், காஞ்சனமாலா "கதை சரியாக அமைக்கப்படவில்லை" என்று இயக்குனர் மீது புகார் தொடுக்கப்பட்டது.
ஒலிப்பதிவு
இப்படத்தின், "முக்கத்தே பெண்ணே" எனும் பாடல் 5 நிமிடங்களில் தொடுக்கப்பட்டது. மேலும், "காத்திருன்னு" எனும் பாடலை இயற்றியதற்காக, ம. ஜெயச்சந்திரன் நாட்டின் சிறந்த இசையமைப்புக்கான விருதைப்பெற்றார்.[12]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஈ மழதன்" | கே. ஜே. யேசுதாஸ் | 4:07 | |
2. | "கண்ணோண்டு சொல்லண்" | சிரேயா கோசல், விஜய் யேசுதாஸ் | 4:51 | |
3. | "காத்திருன்னு" | சிரேயா கோசல் கோஷல் | 4:18 | |
4. | "ஷாரதாம்பரம்" | ப. ஜெயசந்திரன், ஷில்பா ராஜ் | 2:38 | |
5. | "இருவஞ்சி புழாப்பெண்ணே" | ம. ஜெயசந்திரன் | 4:14 | |
6. | "பிரியமுள்ளவனே" | மதுஸ்ரீ நாராயண் | 3:27 | |
7. | "முக்கத்தே பெண்ணே" | மு. மக்பூல் மன்சூர், கோபி சுந்தர் | 4:15 | |
8. | "ஷரதாம்பரம்" | ஷில்பா ராஜ் | 2:39 | |
9. | "ஈ மழதன்" | கே. ஜே. யேசுதாஸ்]], சுஜாதா மோகன் | 4:07 |
வெளியீடு
கேரளாவினுள் 19 செப்டம்பர் 2015-லும், கேரளாவின் வெளியே 2 அக்டோபரிலும் வெளியானது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை, ஏசியநெட் 7 கோடி மதிப்பீட்டில் பெற்றது. இதுவரை, மலையாள உலகில், இவ்வுயர் தொகைக்கொண்டு பெறப்பெற்ற திரைப்படம் இதுவேவாகும்.
திரைப்பட விழா திரையிடல்
கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.கே) 20 வது பதிப்பின் மலையாள சினிமா டுடே பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு படங்களில் இந்த படம் ஒன்றாகும்.[13] இருப்பினும், போட்டிப் பிரிவில் சேர்க்கப்படாததால் படத்தை திருவிழாவிலிருந்து விலக்க இயக்குநர் ஆர்.எஸ்.விமல் முடிவு செய்தார்.[14]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
28 மார்ச் 2016 நிலவரப்படி, என்னு நின்டே மொய்தீன் 55 வெற்றிகளையும், 63 பரிந்துரைகளையும் பெற்றது
மேற்கோள்கள்
- ↑ "Content triumphed over star power in southern filmdom (2015 in Retrospect)". Business Standard. Indo-Asian News Service. 19 December 2015 இம் மூலத்தில் இருந்து 19 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151219095125/http://www.business-standard.com/article/news-ians/content-triumphed-over-star-power-in-southern-filmdom-2015-in-retrospect-115121900185_1.html.
- ↑ James, Anu (31 December 2015). "Premam, Ennu Ninte Moideen and other top Malayalam movies that did well at the box office in 2015". International Business Times, India Edition.
- ↑ "IBNLive Movie Awards 2016: Nominees for Best Actress (South)". IBNLive. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
Parvathy was lauded for her efforts in Malayalam romantic thriller 'Ennu Ninte Moideen'.
- ↑ "Ennu Ninte Moideen unfolds in the first person account of Kanchanamala". The Times of India (17 July 2014). Retrieved on 27 September 2015.
- ↑ "Kanchanamala: A talisman for true love in Kerala". The Indian Express (in English). 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
- ↑ "Prithviraj Coming Up with 3 Big Malayalam Films". International Business Times (26 June 2014). Retrieved 27 September 2015.
- ↑ "I don’t mind playing supporting roles: Parvathy". The Times of India (10 July 2014). Retrieved 27 September 2015.
- ↑ "M Jayachandran feels honoured to work with Shreya Ghoshal". The Times of India (25 June 2014). Retrieved 27 September 2015.
- ↑ Navamy Sudhish (15 July 2014) "In Love with his Lens". The New Indian Express. Retrieved 27 September 2015.
- ↑ Mythily Ramachandran (21 October 2015). "‘Ennu Ninte Moideen’ is an immortal love story". Gulf News. Retrieved 22 October 2015.
- ↑ "Ennu Ninte Moideen: First 2 Days Box Office Collections". www.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
- ↑ Elizabeth Thomas (3 October 2015). "Five-minute composition gets 10 lakh hits".Deccan Chronicle. Retrieved 22 October 2015.
- ↑ பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (13 October 2015). "Nine Malayalam movies to be screened in IFFK". Business Standard. Retrieved 15 October 2015.
- ↑ Asha Prakash (13 October 2015). "Ennu Ninte Moideen backs out of IFFK". The Times of India. Retrieved 15 October 2015.
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
- Hameed Chennamangaloor (November 2015). Ivan Njangalute Priya Moideen. Kottayam, India: DC Books. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-126-46519-4.
- P. T. Mohammed Sadiq (2014). Moideen Kanchanamala – Orapoorva Pranayajeevithom. Calicut, India: Mathrubhumi Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-182-65752-6.
- R. S. Vimal (7 November 2015). Ennu Ninte Moideen. Kottayam, India: DC Books. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-126-46508-8.