உ. ஏ. காதர்
உ. ஏ. காதர் (ஆங்கிலம்: U. A. Khader) இவர் ஓர் இந்திய மலையாள எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறு புதினங்கள், சிறுகதைகள், பயணக் குறிப்புகள் மற்றும் புனைகதை அல்லாதவை உட்பட பலவற்றை மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
சுயசரிதை
யு. ஏ. காதர் 1935 ஆம் ஆண்டில், இர்ராவடி ஆற்றின் கரையில், மியான்மரின் (பர்மா) யங்கோன் (ரங்கூன்) ஐராவதி ஆற்றின்அருகே பில்லின் என்ற கிராமத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை உசங்காந்தகத்து மொய்தூட்டி ஹாஜி இந்தியாவின் கேரளாவின் கொயிலாண்டியில் இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில் அவரது தாய் மமைடி பர்மிய வம்சாவளியைச் சேர்ந்தவர். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட காதர் பிறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது தாயார் இறந்தார். இருப்பினும், மற்றவர்கள் இவரை நன்கு கவனித்துக்கொண்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் உலகப் போர் வெடித்ததில், காதரும் அவரது குடும்பத்தினரும் பர்மாவில் தங்கியிருந்த இடத்தை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏழு வயதில், காதர் இந்தியாவுக்குத் திரும்பி, தனது தந்தையின் சொந்த இடமான கொயிலாண்டியில் மலையாளியாக வளர்ந்தார். அவர் கொயிலாண்டி உயர்நிலைப் பள்ளியில் இருந்து பள்ளிப் படிப்பைப் பெற்றார். பின்னர்,சென்னை, அரசுக் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து ஓவியத்தில் பட்டம் பெற்றார். பின்னர், காதர் சென்னையில் மாணவராக இருந்த நாட்களில் கே.ஏ. கொடுங்கல்லூர் போன்ற எழுத்தாளர்களுடனும், சி.எச். முகமது கோயா போன்ற சமூக பிரமுகர்களுடனும் தொடர்பு கொண்டிருதார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[2] சி.எச். முகமது கோயா அவருக்கு வைக்கம் முகம்மது பஷீரின் பால்யகலாசகி என்ற புதினத்தை கொடுத்து வாசிப்பு உலகை அறிமுகப்படுத்தினார் .[3]
முதல் படைப்பு
காதரின் முதல் கதை 1953 இல் சந்திரிகா வார இதழில் வெளியிடப்பட்டது. ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, ஒரு நண்பருக்கு திருமண பரிசாக இரவு உணவு தொகுப்பை வாங்க ஆசிரியர் தனது கடிகாரத்தை விற்க வேண்டியிருந்தது. காதர் தனது தந்தையைப் பற்றியும், மாற்றாந்தாய் பற்றியும் கதையில் கடுமையாக எழுதியிருந்தார். அவர் கதையை சி.எச் முகமது கோயாவிடம் ஒப்படைத்தார், அவர் அதை சந்திரிகாவில் வெளியிடுவதற்கு முன்பு ஒருசில மாற்றங்களை செய்தார். கதை எழுதுவது மற்றவர்களை பற்றி மோசமாக எழுதுவது அல்ல என்பதுதான் காதருக்கு கோயாவின் செய்தி.[3]
பணிகள்
கேரளாவை தளமாகக் கொண்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான புரோகமண கலா சாகித்ய சங்கத்தின் தலைவராக காதர் இருந்தார்.[4] அவரது சமீபத்திய புதினமான சத்ரு என்பது 2011 சனவரியில் வெளியிடப்பட்டது. 2012 சனவரி முதல் மத்தியமம் வார இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட அவரது பயணக் குறிப்பான ஓர்மகலுடே பெகோடாவில், கிட்டத்தட்ட 70 வருடங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சொந்த ஊரான யாங்கோனுக்குச் சென்றபோது ஏற்பட்ட பழமையான அனுபவங்களை அவர் விவரிக்கிறார்.
யு. ஏ. காதர் கேரள அரசு சுகாதாரப் பணிகள் (1960 முதல்), கோழிக்கோடு அனைத்திந்திய வானொலி நிலையம், (1967 முதல் 1972 வரை), மற்றும் தாய் மற்றும் குழந்தை சுகாதார நிறுவனம்-கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றியுள்ளார். கோழிக்கோடு அரசு பொது மருத்துவமனையின் நிர்வாக பிரிவில் பணிபுரிந்த அவர் 1990 இல் ஓய்வு பெற்றார். மேலும், பல்வேறு இலக்கிய சங்கங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் மற்றும் பல பெரிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்
முக்கிய விருதுகள்
- 1983: கேரள சாகித்ய அகாடமி விருது : கதை - திரிக்கோட்டூர் பெரும
- 1993: எஸ். கே. பொட்டெக்கட் விருது - கதா துருவ ஜீவிதம்
- 1993: அபுதாபி சக்தி விருது - ஒரு பிட்டி வட்டு
- 1999: சி.எச் முகமது கோயா விருது - காளிமுட்டம்
- 2009: கேந்திரா சாகித்ய அகாடமி விருது - திரிக்கோட்டூர் பெருமா [5]
மேற்கோள்கள்
- ↑ Safiya Fathima (10 October 2016). "ഓര്മ്മയിലെ വ്യാളി മുഖങ്ങള്; ഒറ്റപ്പെടലിന്റെ, ഭയത്തിന്റെ ബാല്യം-യു എ ഖാദര്/അഭിമുഖം". Azhimukham. Retrieved 24 February 2019.
- ↑ "U.A. Khader felicitated" பரணிடப்பட்டது 2010-03-27 at the வந்தவழி இயந்திரம். The Hindu. Retrieved 24 February 2019.
- ↑ 3.0 3.1 "U.A. Khader, in his own words" பரணிடப்பட்டது 2008-08-15 at the வந்தவழி இயந்திரம். The Hindu. Retrieved 24 February 2019.
- ↑ K.S. Ravikumar (27 June 2016). "തൃക്കോട്ടൂര് പെരുമയുടെ കഥാകാരന്". Deshabhimani. Retrieved 24 February 2019.
- ↑ ""Kendra Sahithya Academy award for U A Khader"". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-14.