உலாமடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உலாமடல் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். மடல் எனும் சொல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்னை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவதே மடலூர்தல் எனப்படுகிறது. பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அவளை அடைவதற்கு மடலூர்வேன் எனக் கூறுவதாகப் பாடுவது உலாமடல் ஆகும். [1] இது கலிவெண்பாவில் அமையும்.

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 857

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=உலாமடல்&oldid=16784" இருந்து மீள்விக்கப்பட்டது