உத்தரவின்றி உள்ளே வா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உத்தரவின்றி உள்ளே வா
இயக்கம்என். சி. சக்கரவர்த்தி
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
காஞ்சனா
வெளியீடுசனவரி 14, 1971
நீளம்4130 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உத்தரவின்றி உள்ளே வா (Uttharavindri Ulle Vaa) 1971 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல், நகைச்சுவைத் திரைப்படமாகும். சித்ராலயா பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரிப்பில், என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா ,நாகேஷ், ரமா பிரபா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, தேங்காய் சீனிவாசன், ஜெமினி மாலி போன்ற பலரும் நடித்திருந்தனர்.[1][2] இப்படத்தின் கதையை சித்ராலயா கோபு எழுதி, எம். எஸ். விஸ்வநாதன் இசையைமைத்துள்ளார்.[3]

கதைச் சுருக்கம்

இது நான்கு நண்பர்களைப் பற்றிய கதை. கதாநாயகன் ரவிச்சந்திரன் வீரராகவன் என்ற செல்வந்தரின் மகன். அவர் தனது தந்தைக்குச் சொந்தமான ஒரு பங்களாவில் தனது நண்பர்களான நாகேஷ், மாலி, மற்றும் மூர்த்தியுடன் தங்கியுள்ளார். ஒரு விடுமுறையை கழிக்க வெளியூர் செல்ல எண்ணுகின்றனர். அப்போது பெரிய ஆபத்திலிருந்து தப்பித்த காஞ்சனா அந்த வீட்டிற்குள்ளே வருகிறாள். கதாநாயகனிடம், அவள் இரண்டு நாட்கள் அங்கே தங்கிக்கொள்ள தன்னை அனுமதிக்குமாறு கெஞ்சுகிறாள். இதனால் அவர்களின் பயணம் ரத்தாகிறது. ரவிச்சந்திரனும், காஞ்சனாவும் காதல் வயப்படுகின்றனர்.

திடீரென்று, மற்றொரு பெண் (விஜய சந்திரிகா) ஒரு இரவில் அங்கே வந்து தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். சாந்தி என்கிற அந்தக் குழந்தையிடம் ஒரு கடிதம் இருந்தது. அதில் அக்குழந்தை மாலியின் மகள் என்ற குறிப்பு இருந்தது. ஆனால், மாலியோ தான் ஒருபோதும் குழந்தையை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பெண்ணைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறுகிறார். ஆனாலும் அந்தக் குழந்தையின் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தார். ரவிச்சந்திரனின் மற்றொரு நண்பன் மூர்த்தி செவிலியின் (சச்சு) மேல் காதல் கொள்கிறான். சச்சுவின் தந்தை தேங்காய் சீனிவாசன் ஒரு மருத்துவராக உள்ளார். முடிவில் அனைத்து பிரச்சனைகளும் நல்லபடியாக முடிந்து நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

நடிகர்கள்

பாடல்கள்

பாடல்களுக்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன். பாடல்களை எழுதியவர் கண்ணதாசன் ஆவார்.[4][5]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
உன்னைத் தொடுவது இனியது எஸ். பி. பாலசுப்ரமணியம், சாய்பாபா, பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன்
காதல் காதல் என்று பி. சுசீலா, எம்.எல்.ஸ்ரீகாந்த்
தேனாற்றங்கரையினிலே எல். ஆர். ஈஸ்வரி
மாதமோ ஆவணி எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
உத்தரவின்றி உள்ளே வா டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி, கோவை செளந்தர்ராஜன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உத்தரவின்றி_உள்ளே_வா&oldid=30994" இருந்து மீள்விக்கப்பட்டது