உச்சத்துல சிவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உச்சத்துல சிவா
இயக்கம்ஜேபி
தயாரிப்புதேவி கரண்
இசைவித்தியாசாகர்
நடிப்புகரண்
நேகா ரத்னாகரன்
ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவுஹார்முக்
படத்தொகுப்புவி. ஜே. சாபு ஜோசப்
கலையகம்கே எண்டெர்டைன்மெண்ட்ஸ்
விநியோகம்ட்ரீம் பாக்ட்ரி
வெளியீடு16 செப்டம்பர் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உச்சத்துல சிவா 2016 ஆம் ஆண்டு கரண் மற்றும் நேகா ரத்னாகரன் நடிப்பில், வித்தியாசாகர் இசையில், ஜேபி இயக்கத்தில், கரணின் மனைவி தேவி கரண் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4][5].

கதைச்சுருக்கம்

வாடகை மகிழுந்து ஓட்டுநரான சிவா (கரண்) முதல் காட்சியில் தெருவோரம் இட்லிக்கடை நடத்திவருபவரிடம் சுத்தமாக சமைத்துப் பரிமாறு அறிவுரை சொல்வதாக அமைவது அவருடைய கதாப்பாத்திரத்தின் தன்மையை விளக்குவதாக அமைகிறது. அவனது மகிழுந்தில் பயணிக்கிறார் ஞானசம்பந்தம் (ஞானசம்பந்தம்). இருவரும் பேசிக்கொண்டு செல்கிறார்கள். கதையில் ஏற்படும் முக்கியமான திருப்பத்திற்குப் பிறகு திரைக்கதை வேகமெடுக்கிறது.

நிலா (நேகா) அந்த நகரத்தில் போதை மருந்து கடத்தும் கும்பலால் துரத்தப்படுகிறாள். அப்போது அங்குவரும் சிவா அவளைத் தன் வாகனத்தில் ஏற்றிக்கொள்கிறான். அவள் அந்த வாகனத்தில் தன்னை விரட்டி வருபவர்களிடமிருந்து ஏறி தப்பிக்கிறாள். நிலாவின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடு இருக்கும் இடத்தைக் கூறினால் அங்கு சென்றுவிட்டுவிடுவதாக சொல்கிறான். சிறிது நேரத்தில் அவன் நிலவுக்கு செய்த உதவியின் காரணமாக அடுத்தடுத்து பிரச்சனைகள் வரத் தொடங்குகின்றன. அவனது கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கும் பிரச்சனைகளை சமாளித்து, எதிரிகளை வீழ்த்தி, நிலாவை எப்படிக் காப்பாற்றினான் என்பதே கதை.

நடிகர்கள்

தயாரிப்பு

இது கரணின் முதல் தயாரிப்பு ஆகும்[7][8]. நேகா ரத்னாகரன் இப்படத்தின் கதாநாயகியாக 2016 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்[9]. தமிழ்ப்படங்களுக்கு நீண்ட காலமாக இசையமைக்காமல் இருந்த வித்தியாசாகர் இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகில் காலடி பதித்தார்[10].

இசை

படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர். இயக்குனர் தரணி இப்படத்தில் முதன் முதலாக ஒரு பாடலைப் பாடி பாடகராக அறிமுகமானார்.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 தாறுமாறு திப்பு, தரணி, கரண், ஜேபி 4:20
2 பேசு பேசு பலராம், இந்துலேகா வாரியார் 4:58
3 உச்சத்துல சிவா (இசை) வித்தியாசாகர் 2:17
4 உச்சத்துல சிவன்டா வி. எம். மகாலிங்கம் 2:17

விமர்சனம்

டாப்10சினிமா: கரண், நேகா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரின் சிறந்த பங்களிப்பு[11]

மேற்கோள்கள்

  1. "உச்சத்துல சிவா". http://www.behindwoods.com/tamil-movies/uchathula-shiva/uchathula-shiva-photos-pictures-stills.html. 
  2. "உச்சத்துல சிவா". https://tamil.filmibeat.com/movies/uchathula-shiva/story.html. 
  3. "உச்சத்துல சிவா". http://tamiltweet.blogspot.com/2016/09/uchatula-siva-karan-movie-review.html. 
  4. "உச்சத்துல சிவா". https://spicyonion.com/tamil/movie/uchathula-siva/. 
  5. "உச்சத்துல சிவா". http://www.tamilcinetalk.com/uchathula-shiva-movie-reviews/. 
  6. "யஷ்மித்". http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Yashmith-plays-a-key-role-in-Karans-film/articleshow/53929416.cms. 
  7. "கரனின் முதல் தயாரிப்பு". http://www.deccanchronicle.com/entertainment/kollywood/030916/karan-back-with-uchathula-shiva.html. 
  8. "தயாரிப்பாளர் ஆனார் கரண்". https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-karan-becomes-producer/articleshow/54033110.cms. 
  9. "நேகா ஒப்பந்தம்". http://www.iluvcinema.in/tamil/actor-karan-who-was-busy-as-a-lead-actor-is-back-with-uchathula-shiva-which-is-produced-by-his-wife-devi-karan-neha-ratnakaran-is-roped-in-as-a-lead-actress-and-music-will-be-composed-by-vidyasagar/. [தொடர்பிழந்த இணைப்பு]
  10. "வித்தியாசாகர்". http://www.tamilcinemastars.com/vidyasagar-back-score-music-tamil-cinema/. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "விமர்சனம்" இம் மூலத்தில் இருந்து 2020-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201205214239/https://top10cinema.com/article/tl/39606/uchathula-shiva-movie-review. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உச்சத்துல_சிவா&oldid=30965" இருந்து மீள்விக்கப்பட்டது